இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்லர். இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மோகன்லால், சிவ ராஜ்குமார், விநாயகம், தமன்னா, வசந்த் ரவி, சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அருனித் இசைமைத்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட் படமாக மாறியது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.
இதையடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் ரஜினிகாந்த் நடித்தார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. கூலி படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அவருடன் சத்யராஜ், அமீர் கான், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, செளபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். வேட்டையன் படம் சுமாரான வரவேற்பை பெற்றதால், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் படிங்க: கரூரில் திரண்ட சீயான் விக்ரம் ரசிகர்கள்: வீர தீர சூரன் 2 படக் கொண்டாட்டம்
இந்த நிலையில், ஜெய்லர் படத்தின் மெகா ஹிட்டை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த பொங்கல் பண்டிகைக்கு ஜெய்லர் 2 படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வீடியோவுடன் வெளியிட்டனர். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் ஜெய்லர் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில், நடிகர் யோகிபாபு திருச்செந்தூரில் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், திருச்செந்தூர் முருகன் எனக்கு தொடர்ந்து வெற்றியை தருகிறார். ஜெய்லர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் சாருடன் நடித்த அனுபவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. இப்போது ஜெய்லர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறேன். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் அருமையாக வந்துக்கொண்டிருக்கின்றது. ரஜினிகாந்த் சார் வரும் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கும் என தெரிவித்தார்.
மேலும் படிங்க: ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்.. இத்தனை கோடியா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









