ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு.. போட்டோ வைரல்

Actors Redin Kingsley and Sangeetha : நடிகர் ரெடின் கிங்ஸ்லியும், சீரியல் நடிகை சங்கீதாவும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 3, 2025, 10:53 AM IST
  • 47 வயதில் அப்பாவான ரெடின் கிங்க்ஸ்லி
  • வைரலாகும் போட்டோ..
ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு.. போட்டோ வைரல்

Actors Redin Kingsley and Sangeetha Baby Girl: தமிழ் திரையுலகில் தற்போது, பிரபலமான காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும் வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர், தனது 40களில் திருமணம் செய்து கொண்ட இவர், 47வது வயதில் தந்தையாகி இருக்கிறார். இதையடுத்து, தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Add Zee News as a Preferred Source

ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா திருமணம்:
கோலிவுட்டின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர், ரெடின் கிங்ஸ்லி. இவர் பெரும்பாலும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில்தான் நடித்திருக்கிறார். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இவர், திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், சென்னைக்கு வந்துவிட்டார். டாக்டர், கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்டவை இவர் நடித்ததில் சில ஹிட் படங்களாகும்.

ரெடின் கிங்ஸ்லி, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி சீரியல் நடிகையும், சினிமா துணை நடிகையுமான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். மிக சிம்பிளாக நடந்த இவர்களின் திருமண விழாவில் வெகு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். அதன் பின்னர் சில திரை பிரபலங்கள் இவரது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சங்கீதா, ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு ஒரு வளர்ந்த மகனும் இருக்கிறார். ஒரு நிகழ்வில் சந்தித்த இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட, அது நாளடைவில் காதலாக மாறி திருமணத்திலும் முடிந்தது. ஒரு நடிகர் 46 வயதில் திருமணம் செய்வது பெரிய விஷயம் என்றாலும், கிங்ஸ்லியின் திருமணம் குறித்து ஊரே பேசியது.

பிறந்தாச்சு பெண் குழந்தை:
ரெடின் கிங்ஸ்லி, விரைவில் தந்தையாக இருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தகவல்கள் பரவ ஆரம்பித்தது. அதை அவர்களே உண்மை என்றும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டனர். அண்மையில் இவர்களின் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், தற்போது ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அவர் தன்னுடைய மகளை கையில் ஏந்தி கொஞ்சியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்களும், பிற பிரபலங்களும் ரெடின் கிங்ஸிக்கும் சங்கீதாவிற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிங்க: ராம் கோபால் வர்மாவின் சாரி.. பிரம்மாண்டமாக நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்வு

மேலும் படிங்க: என்னை பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.. விஜயகாந்த் குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த குஷ்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News