Actress Abhinaya With Her Fiance Photo : தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர், அபிநயா. இவர், தமிழில் ஒரு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் இவர் நடித்த அனைத்து கதாப்பாத்திரங்களும் கடைந்தெடுத்த முத்துகளாக இருக்கும். இவர், சில வாரங்களுக்கு முன்பு தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக போட்டோவை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், தற்போது, அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளப்போகிறவரின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அபிநயா:
இந்திய திரையுலகை பொறுத்தவரை காது கேட்காத-வாய் பேசாத நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படிப்பட்ட நடிகைகளுள் ஒருவர், அபிநயா. 2009 ஆண்டு ரிலீஸான நாடோடிகள் திரைப்படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து அறிமுகமானவர், அபிநயா. கேரளாவை சேர்ந்த இவர், அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து ஈசன், ஏழாம் அறிவு, வீரம் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார். மலையாளத்திலும் இவர் நடிப்பில் பல நல்ல படங்கள் வெளியாகி உள்ளன. இவரிடம் பலர் ரசிக்கும் ஒரு விஷயமே, அபிநயாவிற்கு இருக்கும் மேற்கண்ட குறைபாடு எதுவுமே அவர் நடிக்கும் பாேது தெரியாது. அந்த அளவிற்கு, தன் குறையை பற்றி மட்டும் பேசுபவர்களை தனது திறமையால் வாய் மூட செய்பவர் இவர்.
அபிநயா, சமீபத்தில் கூட தமிழில் மார்க் ஆண்டனி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரமாக வந்திருந்தார். தான் நடிக்கும் திரைப்படங்களின் ப்ரமோஷன்களுக்கு இவரே சென்று நேரில் பேட்டி கொடுப்பார். இவரது சைகை மொழியை விளக்குவதற்கு மட்டும் ஒருவர் கூடவே இருப்பார்.
நிச்சயதார்த்தம் முடிந்தது..
அபிநயா, சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறினார். அவர் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது என்றும் கூறினார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அதில், ஒருவருடன் சேர்ந்து கோயில் மணியை அடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால், தன்னை திருமணம் செய்து கொள்ள போகிறவரின் புகைப்படத்தை அவர் வெளியிடவில்லை.
வைரலாகும் புகைப்படம்..
அபிநயா, ஒரு வழியாக தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அவரது பெயர் வேகசேனா கார்த்திக். கடந்த மார்ச் 9ஆம் தேதி நிச்சயம் முடிந்ததாகவும் அபிநயா அந்த போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.
விஷாலுடன் காதலா?
அபிநயாவும் நடிகர் விஷாலும், சில படங்களில் ஒன்றாக சேர்ந்து நடிக்கும் போது, நெருக்கமாக பழகியதாகவும் காதலித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இது போன்ற சர்ச்சைகளுக்கு இருவருமே செவி சாய்க்கவில்லை. இருவரும் நல்ல நண்பர்களாக மட்டும் இருந்து வந்தனர். இந்த நிலையில்தான், அபிநயாவின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானது.
எப்போது திருமணம்?
33 வயதாகும் அபிநயா, மார்ச் 9ஆம் தேதி நிச்சயதார்த்தம் நட்துள்ளதாக பதிவிட்டுள்ளாரே தவிர, எப்போது திருமணம் என்கிற தகவலை இன்னும் வெளியிடவில்லை. இது குறித்து அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | நடிகை அபிநயாவிற்கு முடிந்தது நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
மேலும் படிக்க | 15 வருட காதல்-சீக்கிரமே திருமணம்? விஷாலுடன் நடித்த அபிநயா பேட்டி..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









