)
Rakshita Viral Video : சினிமா உலகில் பெரிதாக ஆக்டிவாக இல்லாதவர்கள், திரையுலகை விட்டு விலகிய பின்பு, எப்போதாவது கேமரா முன்பு தோன்றினால், மக்கள் அவர்களை வித்தியாசமாக பார்ப்பது வழக்கம். இங்கும், தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த ஒரு நடிகை, தற்போது ஆள் அடையாளமே தெரியாத வகையில் மாறியிருப்பதாக கூறி, அவருடைய வீடியோ மற்றும் போட்டோக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அந்த நடிகை யார் என்பதையும், அவர் குறித்த விவரங்களையும் இங்கு தெரிந்து கொள்வோம்.
விஜய் நடிப்பில், 2004ஆம் ஆண்டில் வெளியாகியிருந்த திரைப்படம், ‘மதுர’. இந்த படத்தில் மூன்று ஹீரோயின் நடித்திருப்பர். அதில் முக்கியமாக நடித்திருந்தவர், ரக்ஷிதா. கன்னட திரையுலகை சேர்ந்த இவர், பிரேம் என்கிற பிரபல இயக்குநரை திருமணம் செய்து கொண்ட பின் செட்டில் ஆகி விட்டார். அதன் பிறகு அவர், பெரிதாக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை.
அந்த படத்தில் மட்டுமல்லாது சிம்புவுடன் 2003ஆம் ஆண்டில், ‘தம்’ என்கிற படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் வந்த ‘சாணக்யா சாணக்யா’ என்கிற பாடலும் மிகவும் பிரபலமாகும். இதையடுத்து ஓரிரு தமிழ் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருக்கிறார். தமிழில் அவர் மொத்தமே நடித்தது இரண்டு படங்கள்தான் என்றாலும், அவை இரண்டுமே தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களுடன் என்பதால், இன்னும் தமிழ் ரசிர்களின் மனங்களில் இருந்து அவர் அழியாமல் இருக்கிறார். இவரை பற்றிய செய்திதான், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ரக்ஷிதா, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். இவர், கடந்த 2002ஆம் ஆண்டு, புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘அப்பு’ என்கிற திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு மொழியிலும் ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘இடியட்’ என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இரு மொழிகளிலும் அறிமுகமான நாளில் இருந்து இவருக்கு பெரிதாக மவுசு கூடி வந்தது. தனக்கு திருமணம் ஆன பிறகு திரையுலகில் இருந்து விலகிய அவர், அரசியல் மீதும் நாட்டம் கொண்டவராக இருந்தார். இதனால், 2014ஆம் ஆண்டில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டதோடு சில அரசியல் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
ரக்ஷிதா, நீண்ட இடைவேளைக்கு பிறகு 2022ஆம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான ‘எக் லவ் யா’ எனும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு, ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும், ஒரு சில டிவி நிகழ்ச்சிகளிலும் மட்டுமே அவர் தலைக்காட்டி வருகிறார்.
யாருன்னு தெரியுதா மக்கா
— Nandhan Talkz (@Nandhan_Talkz) July 7, 2026
முதல்வருடன் நடித்த நடிகை...
சுத்தமா அடையாளமே தெரில pic.twitter.com/tLdXK10yBJ
ரக்ஷிதா, சமீபத்தில் ஒரு படத்தின் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரை பத்திரிகையாளர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் உடல் பருமனுடன் தோன்றுவதல் பல பேர் அவருக்கு உடல் நலனில் என்ன பிரச்சனை என்பதை கேட்டறிந்து வருகின்றனர். இந்த நடிகை, தற்போது உடல் நலன் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், ரசிகர்கள் பலர் இவருடைய உருவத்தை பற்றியே இணையம் முழுவதும் பேசி வருவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர்.