)
Anupama Parameswaran About Dhruv Vikram : கேரளாவை சேர்ந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தற்போது பைசன்: காளமாடன் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படம் குறித்த நிகழ்ச்சியில் அவர் துருவ் விக்ரம் குறித்து வெட்கப்பட்டுக்கொண்டே பேசிய வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
பைசன் திரைப்படம்:
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் படம், பைசன். கபடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை உள்ளிட்ட படங்களை கொடுத்து, பலரை அசத்திய மாரி செல்வராஜ் இந்த படத்தின் மூலம் என்ன சொல்ல காத்திருக்கிறார் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.
துருவ் விக்ரம் ஜோடியாக அனுபமா:
கேரள நடிகையாக இருந்தாலும், தமிழில் நிறைய ரசிகர்களையும் பட வாய்ப்புகளையும் கையில் வைத்திருப்பவர், அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படம் மூலம் அறிமுகமான இவர், கொடி, சைரன், தள்ளி போகாதே உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பைசன் படத்திலும் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
துருவ் விக்ரம் குறித்து பேசிய வீடியோ!
பைசன் திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து, படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இதில் நடிகை அனுபமா கலந்து கொண்டார். அப்போது துருவ் விக்ரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது இவர் திடீரென்று வெட்கப்பட்டதும், அவரை பற்றி சிரித்துக்கொண்டே பேசியதும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#AnupamaParameswaran blushes when talking about #DhruvVikram
— Chiyaan Seenu (@chiyaan_Vikram6) October 6, 2025
I have acted with so many actors and #DhruvVikram is one of the most passionate actor in have worked with - @anupamahere #BisonKaalamaadanFromDiwali pic.twitter.com/O0HHVBA4gc
“துருவ் பற்றி நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது. கபடி பற்றிய படம் என்பதால், அதற்காக நிறைய முயற்சிகள் மேற்கொண்டு, அதற்காக நிறைய மெனக்கெட்டுள்ளார். நான் இதுவரை சேர்ந்து நடித்த நடிகர்களிலேயே கைதேர்ந்த நடிகர், துருவ் விக்ரம்” என்று கூறினார்.
காதல் கிசுகிசு:
சில நாட்களுக்கு முன்பாக, அனுபமாவும் துருவ் விக்ரமும் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல்கள் பரவியது. அதற்கு காரணமும் இருக்கிறது. இசை கேட்கும் தளமான, ஸ்பாடிஃபையில், துருவ் விக்ரமும் அனுபமாவும் நிலாவிற்கு கீழ் முத்தம் கொடுத்துக்கொள்வது போன்ற போட்டோவை போட்டு, சில பாடல்கள் நிரம்பிய ப்ளே லிஸ்டை வைத்துக்கொண்டிருந்தனர். இதை பார்த்த நெட்டிசன்கள், ரெடிட் தளத்தில் இதனை வைரலாக்கினர். அதன் பின்பு, அந்த ப்ளேலிஸ்ட் ஸ்பாடிஃபையில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் இவர்கள் சீக்ரெட்டாக டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.
சர்ச்சையில் சிக்கிய துருவ் விக்ரம்!
நடிகர் துருவ் விக்ரம், சமீபத்தில் பைசன் பட விழாவில் பேசிய விஷயம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் இதற்கு முன்னர் ஏற்கனவே ஆதித்யா வர்மா மற்றும் மகான் என்று இரண்டு படங்களில் நடித்திருக்கும் நிலையில், ‘பைசன்’ படம்தான் தனது முதல் படம் என்று தெரிவித்தார். “அந்த இரண்டு படங்களை பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இந்த படத்தை வந்து பாருங்கள், மாரி செல்வராஜ் சம்பவம் செய்திருக்கிறார்” என்று கூறினார். உடனே பலர் ‘அவர் தான் எப்படி வளர்ந்து வந்தாேம் என்பதை மறந்து விட்டார், அவர் கூறியது தவறு’ என்று கூறி வந்தனர்.
துருவ் விக்ரம் நடித்த முதல் படத்தை முதலில் இயக்கியவர் பாலா. அது சரியாக இல்லை என்று கூறி, மீண்டும் வேறு இயக்குநரை வைத்து ரீ-ஷூட் செய்யப்பட்டது. அதே போல, மகான் படமும் ‘சியான் 60’ என்கிற பெயரில் ப்ரமோட் செய்யப்பட்டது. எனவே, இதுவும் அவரது தனிப்பட்ட படம் இல்லை என்பதால், மாரி செல்வராஜின் படத்தை தன் படம் என்று அவர் சொன்னதாக சிலர் கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ