)
Deepika Padukone Left Kalki 2898 AD Reason : பிரபல நடிகை தீபிகா படுகோன், கல்கி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, அவர் இந்த படத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
பல கோடி பட்ஜெட்டில் உருவாகி வெற்றிபெற்ற படம், கல்கி. இந்த படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்போது அவர் படத்தில் நடிக்கப்போவது இல்லை என்கிற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கல்கி படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகல்!
பிரபல நடிகை தீபிகா படுகோன், நாக் அஷ்வின் இயக்கிய கல்கி 2989 ஏடி திரைப்படத்தில், சம் 80 என்கிற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் ஹீரோ பிரபாஸ்தான் என்றாலும், தீபிகா இல்லாமல் கதையே இருந்திருக்காது என்று கூறலாம். இவரது கதாப்பாத்திரம் படத்தில் அவ்வளவு முக்கியமானது. கடந்த ஆண்டு இப்படம் வெளியான போது இதில் நடித்திருந்த தீபிகாவின் நடிப்பு குறித்து பலர் பேசினர். தற்போது, இப்படத்தில் இருந்து தீபிகா விலகுவதாக வைஜெயந்தி தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் படி, “தீபிகா படுகோன், கல்கி 2898 ஏடி படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்க மாட்டார். நன்றகா யோசித்த பிறகு, இந்த முடிவுக்கு வந்துள்ளோம். முதல் படத்தின் நெடுந்தூர பயணத்திற்கு பிறகு, எங்களால் இதனை தொடர முடியவில்லை. கல்கி படம், ஈடுபாடுடன் செய்ய வேண்டிய படமாகும். தீபிகாவின் எதிர்கால படங்களுக்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
This is to officially announce that @deepikapadukone will not be a part of the upcoming sequel of #Kalki2898AD.
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) September 18, 2025
After careful consideration, We have decided to part ways. Despite the long journey of making the first film, we were unable to find a partnership.
And a film like…
என்ன நடந்தது?
தீபிகா படுகோன், 8 மணி நேரம்தான் படத்தில் நடிப்பேன் என்று கூறியது முன்னர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு இயக்குநர் மணிரத்னம் ஆதரவு தெரிவித்திருந்தார். இதே டிமாண்டை அவர் கல்கி படக்குழுவிடமும் வைத்திருக்கலாம் என்றும், இதனால் அவர்கள் பிரிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அது மட்டுமன்றி, முதல் படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட, 25% அதிகமாக கேட்டதாகவும், 7 மணி நேரம் வேலை பார்ப்பேன் என்று சொன்னதாகவும் இதை படக்குழு கொடுக்க தயாராக இல்லாததால், படத்திலிருந்து அவர் விலகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தீபிகா படுகோன், ஏற்கனவே சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி வரும் ‘ஸ்பிரிட்’ படத்தில் நாயகியாக நடிக்க இருந்தார். இதில், பிரபாஸ் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் அதிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. இவர் பெயரை குறிப்பிடாமல், சந்தீப் வெளியிட்ட பதிவு வைரலானது. படம் குறித்த அவர் குறிப்பிட்ட நடிகை தனது கதை குறித்து பிறரிடம் குறை கூறியதாகவும், படத்தில் வேலை செய்ய சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் கூறினார்.
இப்படி, தீபிகா நெடு நேரம் வேலை செய்ய முடியாது என்று கூறுவதையும், படத்தின் கதையில் ஓட்டை இருந்தால் அதை மேற்கோள் காட்டி சொல்வதையும் பிரச்சனையாக எடுத்துக்கொள்ளும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் எப்போது திருந்துவார்களோ என்கிற பேச்சும் எட்டிப்பார்க்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ