செய்தியாளர் கேட்ட 'அந்த' கேள்வி... கொந்தளித்த நடிகை கௌரி - யார் மீது தவறு?

Actress Gouri Kishan: உருவக்கேலி செய்யும் வகையில் தன்னை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரை, நடிகை கௌரி கிஷன் அதிரடியாக எதிர்கொண்டு பதிலடி கொடுத்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 7, 2025, 10:29 AM IST
  • கௌரி கிஷன் 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
  • தற்போது Others என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • இப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது.
செய்தியாளர் கேட்ட 'அந்த' கேள்வி... கொந்தளித்த நடிகை கௌரி - யார் மீது தவறு?

Actress Gouri Kishan Youtuber Body Shaming Issue: Others என்ற திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அபின் ஹரிஹரன் என்ற புதுமுகம் எழுதி, இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் புதுமுக நடிகர் ஆதித்ய மாதவன் என்பவர் நாயகனாக நடித்துள்ளார். மேலும், 96 பட புகழ் நடிகை கௌரி கிஷன், மலையாள நடிகை அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Add Zee News as a Preferred Source

Gouri Kishan: பட பிரமோஷன் 

Others திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று ரிலீஸ் ஆவதை முன்னிட்டு, படக்குழுவினர் கடந்த சில நாள்களாகவே தொடர்ந்து பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கடந்த சில நாள்களுக்கு முன் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், யூ-ட்யூப் செய்தியாளரை ஒருவர் நடிகை கௌரி கிஷன் குறித்த கேட்ட கேள்வியும், அதற்கு நடிகை கௌரி கிஷன் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கொடுத்த பதிலடியும் தற்போது வைரலாகி வருகிறது.

Gouri Kishan:  நடிகையின் எடையை கேட்ட செய்தியாளர்

Other திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் யூ-ட்யூப் செய்தியாளர் ஒருவர், படத்தின் நாயகன் ஆதித்ய மாதவனிடம், நடிகை கௌரி கிஷனின் எடை எவ்வளவு? என கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுதான் தற்போது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. செய்தியாளர் தன்னை குறித்து நடிகரிடம் கேட்ட கேள்வி, தன்னை மிகவும் பாதித்ததாகவும், இதுபோன்ற கேள்விகள் இனி எழாமல் இருக்க வேண்டும் என்றும் நேர்காணல் ஒன்றில் கௌரி கிஷன் பேசியிருந்தார். 

இதையடுத்து, சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு நேற்று Others திரைப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டிருக்கிறது. இந்த திரையிடலுக்கு பின்னர் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அப்போது, கௌரி கிஷனுக்கும், அந்த யூ-ட்யூப் செய்தியாளருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

Gouri Kishan: திறமையை முன்னிறுத்துவேன்

அப்போது நடிகை கௌரி அந்த செய்தியாளரை நோக்கி, "எனது உடல் எடை உங்களுக்கு எதற்கு? அதற்கும் படத்திற்கும் என்ன தொடர்பு? ஒவ்வொரு பெண்ணுக்கும் உடலமைப்பு வித்தியாசமாக இருக்கும். நான் எனது திறமையை முன்னிறுத்தவேன். நான் இதுவரை கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்துள்ளேன், கமெர்ஷியல் நாயகி உங்களின் தனிப்பட்ட அங்கீகாரம் எனக்குத் தேவையில்லை" என்றார்.

Gouri Kishan: உருவக்கேலியை நிறுத்துங்கள்

இது சாதாரண கேள்வி என அங்கிருந்த செய்தியாளர்கள் சூழலை கட்டுக்குள் கொண்டுவர நினைத்த, அதை முற்றிலும் நிராகரித்த கௌரி கிஷன், "இதெல்லாம் நகைச்சுவையானது இல்லை. இதுபோல் உருவக்கேலி செய்வதை நிறுத்துங்கள். இது என்னை குறித்து கேள்வி. எனது கருத்தை தெரிவிக்க எனக்கு உரிமை இருக்கிறது" என்றார்.

Gouri Kishan:  நடிகரிடம் இப்படி கேட்பீர்களா?

மேலும், "படத்தில் எனது கதாபாத்திரம் குறஇத்து எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை. படத்தில் நடிக்க நான் என்னென்ன விஷயங்களை செய்தேன் என்பதை கேட்கவில்லை.  ஆனால் அவருக்கு எனது உடல் எடைதான் தெரிந்துகொள்ள வேண்டுமா?" என்றார். இதுபோன்ற உருவகேலிகள் நடிகைகளை சுற்றியே நடக்கிறது என்றும் ஒரு நடிகரை நோக்கி அவரின் உடல் எடையை உங்களால் கேட்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினர்.

Gouri Kishan: கௌரி கிஷனுக்கு பெருகும் ஆதரவு

நீங்கள் நடிகைகளை பொதுமைப்படுத்துகிறீர்கள் என்றும் இது ஊடக தர்மம் இல்லை என்றும் உங்களின் தொழிலுக்கு இழுக்கு என்றும் அவர் கூறினார். உருவக் கேலி செய்யும் வகையில் கேள்வி எழுப்பிய செய்தியாளரை, நடிகை கௌரி கிஷன் அதிரடியாக எதிர்க்கொண்டது பாராட்டத்தக்கது, அதேநேரத்தில் அவருக்கு பிரபலங்கள், நெட்டிசன்ஸ் தங்களது பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | விஜய்க்கு நான் என்றும் எதிரி இல்லை.. நான் சொல்ல வந்தது இதுதான் - நடிகர் அஜித் குமார் விளக்கம்!

மேலும் படிக்க | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ்! எப்போது தெரியுமா? சுட சுட அப்டேட்..

மேலும் படிக்க | “என் கணவருடன் உறுதியாக நிற்பேன்” மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஸ்ருதி பரபரப்பு அறிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News