Gouri Kishan Shuts Body Shaming : 96 திரைப்படம் மூலம் பலரால் அறியப்பட்ட நடிகையாக மாறியவர், கெளரி கிஷன். இவர், சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட போது பெரும் பிரச்சனை ஒன்று வெடித்தது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Others பத்திரிகையாளர்கள் சந்திப்பு:
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்யா மாதவன் மற்றும் கௌரி கிஷன் நடித்திருக்கும் படம், Others. இந்த படத்தின் பத்திரிகையாளர்களுக்கான ஷோ சமீபத்தில் காண்பிக்கப்பட்டு, அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் படம் குறித்து சில செய்தியாளர்கள் கேள்வி கேட்க, ஒரு செய்தியாளர் கெளரி கிஷனை நோக்கி வைத்த கருத்து, பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதற்கு முன்னரே ஒரு நிகழ்ச்சியில், Others படத்தின் ஹீரோவிடம் “நீங்கள் கெளரி கிஷனை தூக்கியிருக்கிறீர்களே, அவரது எடை என்ன என்பது தெரியுமா?” என்பது போன்ற கேள்வியை செய்தியாளர் ஒருவர் வைத்திருக்கிறார். அந்த இடத்தில் ஷாக்கான கெளரி கிஷன் அப்போது எதுவும் இதுபற்றி பேசவில்லை. பின்னர் கொடுத்திருந்த ஒரு நேர்காணலில் அப்படிப்பட்ட கேள்வி மிகவும் தவறு என்று கூறியிருந்தார். அது, மனவருத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார். இது குறித்துதான், நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் அந்த குறிப்பிட்ட செய்தியாளர் பேசினார். அப்போது, இருவருக்கும் பிரச்சனை வெடித்தது.
உருவ கேலி செய்ததாக கெளரி கிஷன் குற்றச்சாட்டு:
தான் கேட்ட கேள்வியில் என்ன தவறு என்று அந்த செய்தியாளர் பேச, அதற்கு பதிலளித்த கெளரி “நீங்கள் கேட்ட கேள்வி முட்டாள் தனமானதுதான்” என்று கூறினார். மேலும், “இதே கேள்வியை ‘உங்கள் எடை என்ன?’ என்று கேட்பீர்களா? எதற்கு நாயகியிடம் மட்டும் கேட்கிறீர்கள்?” என்று கேட்டார். தொடர்ந்து கெளரியையும் அந்த செய்தியாளரையும் பலரும் அடக்க முயன்றனர். தனி பெண்ணாக இங்கு அமர்ந்திருக்கும் தன்னை அனைவரும் டார்கெட் செய்வதாக தெரிவித்தார்.
பிரபலங்கள் ஆதரவு!
கெளரி கிஷனன் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, அவருக்கு ஆதரவாக பல பிரபலங்கள் பதிவிட்டுள்ளனர். நடிகை ரோகிணி “தன்னை அவமதித்த பத்திரிகையாளரை எதிர்த்து, தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கௌரியை தாக்குவது முற்றிலும் தவறு. நான் அவருடன் நிற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து நடிகை குஷ்புவும், ”தன் நிலையில் சரியாக நின்று கருத்தை உறக்க கூறிய கௌரிக்கு வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து சின்மயியும் இது போன்று கேள்வி கேட்கும் யூடியூபர்களுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு, கௌரி கிஷனுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். மஞ்சிமா மோகனும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கௌரி கிஷன் இது குறித்து பதிவிட்டிருக்கும் வீடியோவில், ரெபா ஜான், கிருத்தி ஷெட்டி, தமிழ் ரித்திகா, ஸ்ருபி, சஞ்சனா சாரதி உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர். இப்படி கேள்வி கேட்பவர்களுக்கு, இந்த மாதிரிதான் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
அந்த செய்தியாளர், “இந்த கேள்வி உங்களை கேட்கப்படவில்லையே, நீங்கள் ஏன் பதில் சொல்கிறீர்கள்” என்று கேட்டதும், “நீங்கள் என்னிடம் பதில் சொல்ல வேண்டும்” என்று சொன்னதும் இணையவாசிகளை எரிச்சலடைய செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கெளரி கிஷன்தான் இன்டர்நெட் ஹீரோவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கடல் கன்னியாக மாறிய கௌரி கிஷன்! இணையத்தை கலக்கும் படங்கள்!
மேலும் படிக்க | செய்தியாளர் கேட்ட 'அந்த' கேள்வி... கொந்தளித்த நடிகை கௌரி - யார் மீது தவறு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









