)
Kajal Aggarwal Accident Death Rumor : தென்னிந்திய திரையுலகில், பிரபல நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் குறித்த செய்தி ஒன்று இணையத்தில் சில தினங்களுக்கு முன்பு வைரலாகி வந்தது. இதற்கு அவர் விளக்கம் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
காஜல் அகர்வால்:
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் காஜல் அகர்வல். தமிழில் விஜய், கார்த்தி, சூர்யா, விஷால் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தெலுங்கிலும் ராம் சரண், சிரஞ்சீவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின்பு, படங்களில் நடிப்பதை ஓரளவிற்கு குறைத்துக்கொண்ட இவர், இப்போது ஒரு குழந்தைக்கு தாயாகவும் இருக்கிறார். இவர், தற்போது ராமாயணா படத்தில் மண்டோதரி கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இறந்து விட்டதாக வதந்தி..!
சில தினங்களுக்கு முன்பு, மக்களை திடுக்கிட வைக்கும் வகையில் ஒரு வதந்தி இணையத்தில் வைரலானது. காஜல் அகர்வால், ஒரு பெரிய சாலை விபத்தில் சிக்கியதாகவும், உயிரிழந்து விட்டதாகவும் அந்த செய்திகள் கூறின. இது, பலரை திடுக்கிட வைத்தது. இந்த நிலையில், காஜல் அகர்வால் அதற்கு பதிலளித்து ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார்.
காஜல் போட்ட பதிவு..
காஜல் அகர்வால் குறித்து இப்படி ஒரு செய்தி வந்த பின்பு, அவரது சமூக வலைதளம் முழுவதும் ரசிகர்களின் கவலைக்குறிய கமெண்ட்களால் நிரம்பியது. இதையடுத்து, காஜல் அகர்வாலே முன்வந்து, இவையணைத்தும் வதந்திதான் என்று கூறியிருக்கிறார்.

“சமீபத்தில் நான் விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக ஒரு செய்தி உலா வருவதை கவனித்தேன். உண்மையில், இதை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம், இது முழுக்க முழுக்க பொய். கடவுளின் கருணையால் நான் நலமுடன் இருக்கிறேன். யாரும் இது போன்ற பொய் செய்திகளை பரப்புவதையும், நம்புவதையும் தவிர்த்து விடுங்கள். உங்களது பாசிடிவிடி மற்றும் உண்மைத்தன்மையின் மீது கவனம் செலுத்துங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து, அவர் விபத்தில் சிக்கியது உண்மையல்ல என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
ராமாயாணா படம் குறித்து..
பாலிவுட்டில் இன்னொரு ராமாயணா உருவாகி வருகிறது. இதில், ரன்பீர் கபூர் ராமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார். இதனை, நித்தேஷ் திவாரி இயக்குகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தில், காஜல் அகர்வால் ராவணனின் மனைவி அதாவது மண்டோதரி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தியன் 2 படத்தில் கமலும் காஜலும் சேர்ந்து நடித்திருந்த காட்சிகள் சில இடம் பெற்றிருந்தன. இவை முழுமையாக இந்தியன் 3 படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் காஜல் அகர்வால் தாட்சாயிணி எனும் கேரக்டரில் வருகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ