தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவிற்கு வந்த நிலையில், மாநாடு, வெந்து தணிந்தது காடு என ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது இவர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைப் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது 48வது படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அப்படத்தில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் விலகியதால், அவரே அப்படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த நிலையில், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எஸ்டிஆர் 49 படத்திற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கயாது லோஹர் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகை கயாது லோஹர் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தின் மூலம் பிரபலமானார். அப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். இச்சூழலில் சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மேலும், கயாது லோஹர் அதர்வவுடன் இதயம் முரளி படத்தில் நடித்து வருக்கிறார். அதேபோல் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: சார்பட்டா பரம்பரை 2 படம் எடுப்பதில் சிக்கல்.. விலகிய முக்கிய நபர்?
மேலும் படிங்க: சினிமாவிற்குள் என்ட்ரி கொடுக்கும் ஷங்கரின் மகன்! அதுவும் பெரிய இயக்குநரின் படம்..
மேலும் படிங்க: OG Sambavam பாடலில் இதை கவனித்தீர்களா? சூப்பர் மேட்டரா இருக்கே..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









