Keerthy Suresh Next Movie Hero : தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான கீர்த்திக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது. இந்த நிலையில், அவரது அடுத்த படத்தில் ஒரு ரொமாண்டிக் ஹீரோ அவருக்கு ஜோடியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
திருமணத்திற்கு பின் அமைதியாக இருக்கும் கீர்த்தி..!
தென்னிந்திய அளவில் டாப் நடிகைகளுள் ஒருவராக விளங்குபவர், கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமான இவர், அதன் பின்பு தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து மலையாளம் மற்றம் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில்தான், தனக்கு விரைவில் திருமணம் ஆக இருக்கும் விவரத்தையும் அவர் அறிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி. இவர்களின் திருமணத்தில் சில நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். முக்கியமாக நடிகர்கள் விஜய், த்ரிஷா, கல்யாணி பிரியதர்ஷன், அட்லீ, அவரது மனைவி பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு, பேபி ஜான் திரைப்படத்தில் நடித்திருந்தார். திருமணமான கையோடு, அவர் அந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது வைரலானது. ஆனால், அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்காமல் அமைதியாக இருக்கிறார்.
புதிதாக நடிக்கும் படம்..
கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிக்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், இப்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அவர் ஒரு ரொமாண்டிக் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறாராம். ஆக்ஷன் ட்ராமா கதையாக இந்த படம் உருவாக இருப்பதாகவும், இதில் கீர்த்தியின் நாயகி கதாப்பாத்திரத்திற்கு நல்ல வெயிட்டேஜ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு தெலுங்கு படம் என்பதும் போனஸ் தகவல்.
இந்த படத்தில் முதலில் ருக்குமணி வசந்த் என்கிற நடிகையைதான் ஹீரோயினாக நடிக்க வைக்க இருந்ததாகவும், கடைசி நேரத்தி கீர்த்தி சுரேஷை அவர்கள் தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. கூடவே, பேபி ஜான் படத்திற்கு பிறகு நல்ல கதையுள்ள படத்தை பார்த்து நடிக்க வேண்டுமென்ற முடிவுடன் இருக்கிறாராம் கீர்த்தி.
யார் அந்த ரொமாண்டிக் ஹீரோ?
அவர் வேறு யாருமில்லை, நடிகர் விஜய் தேவரகொண்டாதான். அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமான இவர், தென்னிந்தியாவின் ரொமான்டிக் ஹீரோவாக அறியப்படுகிறார். இது வரை ராஷ்மிகா மந்தனா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல ஹீரோயின்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவருக்கும் கீர்த்திக்கும் படத்தில் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும் எனக்கூறப்படுகிறது.

35 வயதாகும் விஜய் தேவரகொண்டா, பிரபல நடிகை ராஷ்மிகாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் லிவ்-இன் உறவில் இருப்பதாகவும் விரைவில் திருமணம் குறித்த அப்டேட் எதையாவது வெளியிடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்புர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | கீர்த்தி சுரேஷ்-ஆண்டனி தட்டில் வயது வித்தியாசம்! அடேயப்பா..இவ்வளவா?
மேலும் படிக்க | திருமணத்திற்கு பிறகு கீர்த்தி இணையும் முதல் ஹீரோ! ‘இந்த’ 35 வயது நடிகர்தான்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









