என்னை பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.. விஜயகாந்த் குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த குஷ்பு!

நடிகை குஷ்பு கேப்டன் விஜயகாந்த் குறித்து முன்பு அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Apr 2, 2025, 05:35 PM IST
  • கேப்டன் விஜயகாந்த் கடந்த 2023 இறுதியில் மறைந்தார்
  • இந்நிலையில், அவர் குறித்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார் நடிகை குஷ்பு
என்னை பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.. விஜயகாந்த் குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த குஷ்பு!

அனைவராலும் அன்பாக கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த 2025 டிசம்பர் கடைசியில் நம்மை விட்டு பிரிந்தார். அவரது மறைவு திரைத்துறை, அரசியல் துறையை தாண்டி தமிழக மக்கள் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. இருப்பினும், மறைந்தாலும் பெயர் சொல்லும் என்பது போல கேப்ட விஜயகாந்த் மறைந்தாலும், அவர் செய்த உதவிகள் அவரை இன்னும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. 

Add Zee News as a Preferred Source

கருப்பாக இருந்தாலும் திரைத்துறையில் சாத்திக்கலாம் என்ற எடுத்துக்காட்டில் கேப்டனை விஜயகாந்தையும் பொருத்திக்கொள்ளலாம். மதுரையில் இருந்து சென்று திரைதுறையில் பல கஷ்டங்களை சந்தித்து அதனை கடந்து கேப்டனாக உருவேடுத்தார். எளிய மக்கள் மீதுள்ள அக்கறை அவரை திரைத்துறையை தாண்டி அரசியலிலும் பயணிக்க வைத்தது. அவரது உழைப்பு எதிர்கட்சி தலைவர் என்ற அங்கிகாரத்தை கொடுத்தது. சட்டப்பேரவையில் இவரது துணிச்சலான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. 

மேலும் படிங்க: சமந்தாவுக்கு கோவில்.. குடும்பத்துடன் வழிப்படும் வெறித்தனமான ரசிகர்கள்

 

ஆனால் அரசியல் களத்தில் தொடர்ந்து சாதிக்க அவரது உடல் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. உடல் நல பாதிப்பால் தொடர்ந்து கஷ்டப்பட்ட அவர், 2023 இறுதியில் மறைந்தார். இந்த நிலையில், நடிகை குஷ்பு கேப்டன் விஜயகாந்த் உடனான பல நினைவுகளை அவர் அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

அந்த பேட்டியில் பேசிய அவர், கேப்டன் விஜயகாந்த் எனக்கும் மிகவும் நெருக்கமானவர். அவர் எனக்கு எப்போதும் ஸ்பெஷல். படப்பிடிப்பு தளத்தில் அவர் பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி சாப்பிட்டியா என்பதுதான். அவர் வீடும் என் வீடும் எதிர் எதிர்லதான் இருக்கும். அவரது பெட்ரூம் மற்றும் டெரஸில் இருந்து பார்த்தால் எனது சமையல் அறை தெரியும். 

அவர் நான் சமையல் அறையில் இருக்கும் போது பார்த்துவிட்டால். உடனே போன் செய்து, என்ன சாப்பாடு என கேட்பார். நான் சப்பாத்தி என கூறினால், சிக்கனா? மட்டனா? என கேட்பார். சிக்கன் என கூறுவேன். உடனே சரி இங்க கொஞ்சம் கொடுத்துவிடு என கூறிவிட்டு போனை வைத்துவிடுவார். அவர் சொக்கத்தங்கம். அவரை போல ஒரு மனிதரை பார்ப்பது என்பது மிகவும் கடினம் என பேசி உள்ளார் நடிகை குஷ்பு. 

மேலும் படிங்க: குட் பேட் அக்லி.. டிக்கெட் முன்பதிவு இந்த தேதியில் ஆரம்பம்.. கொண்டாட்டத்திள் ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News