சூப்பர் ஸ்டார் என்றால் தெரியாத ஆளே கிடையாது. அந்த அளவிற்கு உலகம் முழுவதும் பிரபலமானவர் ரஜினிகாந்த். இன்று எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் ரஜினியை பிடிக்காத ரசிகர்கள் இருக்கவே முடியாது. இப்படி அபரிமிதமான புகழைப் சம்பாதித்த ரஜினிக்கு கஷ்டமே வராது என நினைத்தால் அதுதான் தவறு. நடிகர் ரஜினி அரசியலில் அடியெடுத்து வைப்பதாக சொன்னவுடன் அவரது ரசிகர்கள் அவரை நினைத்து வேதனை பட ஆரம்பித்தனர்.
ரஜினிக்கும் அரசியல் செட் ஆகாத காரணத்தினால் அதை விட்டு மீண்டும் நடிக்க வந்தார். அடுத்ததாக அவரது மகள் ஐஸ்வர்யாவை குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் வேதனை பட்டு வருகிறார். இப்படி இருப்பவர் சினிமாவின் ஆரம்ப காலத்தில் கிசுகிசுக்களில் சிக்கினார் எனறால் நம்ப முடிகிறதா.
1975ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்" என்ற திரைபடைத்தின் மூலம் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து மூன்று முடிச்சு, காயத்திரி, 16 வயதினிலே, பைரவி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், பில்லா, நட்சத்திரம், அன்புக்கு நான் அடிமை, காளி, நான் போட்ட சவால், எல்லாம் உன் கைராசி, ஜானி, பொல்லாதவன், முரட்டு காளை, நெற்றிக்கண், ராணுவ வீரன் என 1981 வரை மிகவும் ஆக்ரோஷ்க்காரராக மட்டுமே நடித்து வந்தார் ரஜினிகாந்த்.
அதன் பின், 1981க்கு மேல் இனி தான் நகைச்சுவையாக நடிக்கப்போவதாக கூறி "தில்லு முல்லு" என்ற படத்தில் மிகவும் பிரமாதமாக யாரும் எதிர்பாராத வகையில் நகைச்சுவையாக நடித்தார். அதன் பின் வந்த படங்களான வேலைக்காரன், குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், கோடி பறக்குது, ராஜாதி ராஜா, மாப்பிள்ளை, சிவா, ராஜா சின்ன ரோஜா, பணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, அதிசிய பிறவி, தளபதி, தர்மதுரை, அண்ணாமலை, மன்னன், உழைப்பாளி, எஜமான், பாட்ஷா,முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி தி பாஸ், எந்திரன், லிங்கா, கபாலி, பேட்ட, தர்பார், அண்ணாத்த, பாபா, ஜெயிலர், வேட்டையன், லால் சலாம் என பல படங்களில் தனது நகைச்சுவை திறனை வெளிக்காட்டினார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு இயக்குனர்கள் இரண்டு படத்தை இயக்கி வருகின்றனர். ஒன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "கூலி" திரைப்படம். மற்றொன்று நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2. இப்படி இருக்க, வயதானலும் இன்றும் பல ரசிகர்களை வைத்திருக்கும் ரஜினிக்கு அன்று ரசிகர் பட்டாளம் என்பது மக்களிடம் மட்டுமல்லாது ஹீரோயின்களிடமும் இருந்தது. அதனால் பல சிக்கல்களில் சிக்கினார் ரஜினி எனவும் கூறப்படுகிறது. பெண்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கும் ரஜினியிடம் நம்பிக்கை மற்றும் நட்புரீதியாக நடிகைகள் பழகுவதுண்டு. அவருடன் இருப்பது பாதுகாப்பாக உள்ளது எனவும் பல பேர் கூறியுள்ளனர்.
ஆனால் இதனை பார்க்கும் பலரும் உடனே ரஜினியை குறித்தும் அந்த நடிகையை குறித்தும் கிசு கிசுத்து விடுவர். அந்த வகையில், ஒரு காலத்தில், நடிகர் ரஜினிக்கும், நடிகை லதாவுக்கும் காதல் இருந்ததாகவும் இந்த தகவலை அறிந்த மறைந்த நடிகர் எம்ஜிஆர், தன்னுடைய ராமாவரம் தோட்டத்துக்கு ரஜினிகாந்த்தை அழைத்து காட்டமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த கிசு கிசுப்பு தொடர்பாக நடிகை லதா மனம் திறந்து உள்ளார். சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டியளித்த லதா, "ரஜினிகாந்த் மிகவும் நல்லவர். அதுமட்டுமல்லாமல் என்னுடைய நல்ல நண்பர். இந்த கிசு கிசு காலகட்டத்தில் ரஜினிகாந்த் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். ஆனால் நான் அப்போதே பிரபலமாக இருந்தேன்.
அதிலும் சூப்பர் ஸ்டார் ஜோடி என நயன்தாரா பெயர் எடுத்ததை போல் நான் எம்ஜிஆர் ஹீரோயின் என்று பெயர் எடுத்திருந்தேன். நான், ரஜினிகாந்த், மஞ்சுளா, விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த 'ஆயிரம் ஜென்மங்கள்' திரைப்படத்தின் ஷூட்டிங் ஆழியார் அணைக்கட்டில் நடந்தது. அப்போதே விஜயகுமாரும், மஞ்சுளாவும் எனக்கு நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ரஜினியும் அப்போது எங்களுடன் பழகினார். மாலை நேரமானால் எங்களுடன் வந்து அமர்ந்து கொண்டு சகஜமாக பேசுவார். அடுத்ததாக கோயிலுக்கும் ஒன்றாக போவோம் அவ்வளவு தான்.
இதனை பார்த்த சில நல்ல உள்ளங்கள், என்னையும் ரஜினியையும் சேர்த்து வைத்து ஏகப்பட்ட கட்டு கதைகளை கூறினார்கள். ஆனால் அதிலெல்லாம் கொஞ்சம் கூட உண்மை அல்ல. அதனை யாரும் நம்பவும் வேண்டாம். அவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி மிகச்சிறந்த மனிதர். இப்போது அவர் உலகளவில் மிகப்பெரிய ஸ்டாராக இருக்கிறார்.
அவரது புகழ் வானளவில் இருக்கிறது. ஆனாலும் அதை தன்னுடைய தலையில் ஏற்றிக்கொள்ளவே மாட்டார். அப்போது எப்படி பழகினாரோ அப்படித்தான் இப்போதும் எங்களுடன் பழகி கொண்டு இருக்கிறார். அதன் காரணமாகத்தான் எனக்கு ரஜினிகாந்த்தை மிகவும் பிடிக்கும்" எனக் கூறினார்.
மேலும் படிங்க: குட் பேட் அக்லி படத்தில் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இந்த நடிகரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ