)
Mrunal Thakur Body Shaming Apology : சீதா ராமம் திரைப்படம் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை, மிருணாள் தாகூர். இவர், இன்னும் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும், இவருக்கு இங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில், அவர் இன்னொரு நடிகையை உருவ கேலி செய்திருந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வந்தது. அதற்கு மிருணாள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
மிருணாள் தாகூர்:
வட இந்திய நடிகையான மிருணாள் தாகூர், சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு நானியுடன் அவர் நடித்திருந்த ஹாய் நன்னா படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இந்தியிலும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரை தமிழ் படம் ஏதாவது ஒன்றில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், இவர் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
மிருணாள் சிக்கிய சர்ச்சை:
மிருணாள் தாகூர், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். அவர், சீரியிலில் நடித்து காெண்டிருந்த போது பல நேர்காணல்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டிருக்கிறார். அப்பாேது ஒரு நேர்காணலில் அவர் விளையாட்டாக நடிகை பிபாஷா பாசு பார்க்க ஆண் போல இருப்பதாக உருவ கேலி செய்து பேசியிருந்தார். இந்த வீடியோ சமீபத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிபாஷா பாசு, தமிழில் சச்சின் படத்தில் நடித்துள்ளார். குட்டி படத்திலும் ஒரு பாடலுக்கு நடனாடியிருக்கிறார்.
மன்னிப்பு கேட்டார்..
மிருணாள் தாகூர், பிபாஷா பாசு பற்றி அப்படி பேசியதை அடுத்து இணையத்தில் ரசிகர்கள் அவரை போட்டு துவைக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில், மிருணாள் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், “19 வயது இளமையில், நான் பல விஷயங்களை முட்டாள் தனமாக பேசியிருக்கிறேன். எனது குரலின் எடை என்ன என்பது எனக்கு தெரியவில்லை. என் நோக்கம் ஒருபோதும் யாரையும் உடல் குறித்து அவமதிப்பது அல்ல. அது ஒரு பேட்டியில் நடந்த சுலபமான கிண்டல் மட்டுமே, ஆனால் அது அளவை மீறிவிட்டது. அது எப்படி பட்டதாக வெளிப்பட்டது என இப்போது புரிகிறது, மேலும் நான் அந்த வார்த்தைகளை வேறுவிதமாகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டுமென்று உண்மையிலேயே விரும்புகிறேன்.

காலப்போக்கில், அழகு எவ்வித வடிவிலும் இருக்கும் என்பதை மதிப்பது எனக்குப் பழகிவிட்டது, இதை நான் இப்போது உண்மையாக மதிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
தனுஷ்-மிருணாள் தாகூர் காதல்:
நடிகர் தனுஷும் மிருணாள் தாகூரும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் சில பார்ட்டிக்களில் ஒன்றாக கலந்து கொண்டது, பேசுபொருளாக மாறியது. இதையடுத்து, மிருணாள் தானும் தனுஷும் வெறும் நண்பர்கள்தான் என்று கூறினார். இருப்பினும், இவர்கள் தங்களது உறவை சீக்ரெட்டாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ