தனுஷா? ஸ்ரேயாஸா? மிருணாள் தாகூர் காதலிக்கும் நபர் யார்? அவரே சொன்ன விஷயம்..

Mrunal Thakur Dating Dhanush Shreyas Iyer : பிரபல நடிகை மிருணாள் தாகூர், கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸை காதலிப்பதாக தகவல்கள் பரவியது. இதற்கு அவர் பதிலளித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Dec 2, 2025, 12:44 PM IST
  • மிருணாள் தாகூர் டேட்டிங் செய்யும் நபர் யார்?
  • தனுஷா? ஸ்ரேயாஸ்-ஆ?
  • அவரே சொன்ன பதில்..
தனுஷா? ஸ்ரேயாஸா? மிருணாள் தாகூர் காதலிக்கும் நபர் யார்? அவரே சொன்ன விஷயம்..

Mrunal Thakur Dating Dhanush Shreyas Iyer : தென்னிந்தியாவின் பிரபல நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார் மிருணாள் தாகூர். இவர், சில நாட்களுக்கு முன்னர் நடிகர் தனுஷை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இப்போத கதை அப்படியே மாறி, ஷ்ரேயாஸை டேட்டிங் செய்வதாக தகவல் வெளியானது. இப்படி பரவிய வதந்திக்கு, மிருணாள் தாகூரே ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

மிருணாள் தாகூர்-தனுஷ் நெருக்கம்:

சில நாட்களுக்கு முன்பு, இந்தி நடிகை மிருணாள் தாகூரும், நடிகர் தனுஷும் ஒரு படத்தின் திரையிடுதலின் போது கைப்பிடித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இருவரும் இன்ஸ்டாவில் ஒருவரை ஒரவர் ஃபாலாே செய்வதும், தனுஷின் சகோதரிகளும் மிருணாளும் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதும் வைரலானது. இதையடுத்து, தனுஷின் இட்லி கடை பாடல் ஒன்றையும் மிருணாள் பாடி வீடியோ வெளியிட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இருவரும் கொஞ்சம் சைலண்டாக இருந்தனர்.

ஸ்ரேயாஸ் உடன் நெருக்கம்?

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் உடன், மிருணாள் தாகூர் கடந்த சில நாட்களாக நெருக்கம் காட்டுவதாக தகவல் வெளியானது. இது குறித்து அனைவரும் பேசி வந்த நிலையில், மிருணாள் தாகூரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். ”அவர்கள் இப்படி பேசுவது எனக்கு சிரிப்பைதான் வரவழைக்கிறது. வதந்திகள், எப்போதும் இலவச விளம்பரம்தான். அது எனக்கு பிடித்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். 

பிசியாக வலம் வரும் மிருணாள்:

இந்தியில் சீரியல் நடிகையாக இருந்த மிருணாள் தாகூர், சில பாலிவுட் படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருந்தார். அவருக்கு இந்தியில் படங்கள் எதுவும் க்ளிக் ஆகாததால், அப்படியே தெலுங்கு சினிமா பக்கம் வந்தார். அப்படி அவருக்கு பெரிய ஹிட் கொடுத்த படம், ‘சீதா ராமம்’. இந்த படத்திற்கு பிறகு, அவருக்கு பல சினிமா உலகில் இருந்து கதவுகள் திறந்தன.

மிருணாளுக்கு, சீதா ராமம் படத்தை அடுத்து, ‘ஹாய் நன்னா’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆக அமைந்தது. தொடர்ந்து கல்கி 2898 ஏடி, சன் ஆஃப் சர்தார் 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இப்போது பான் இந்திய நடிகையாக வலம் வரும் இவர், அடுத்து இன்னொரு பெரிய ப்ராஜெக்டிலும் கமிட் ஆகி இருக்கிறார். 

அட்லீ இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில், மிருணாள் தாகூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கில் உருவாகி வரும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் இரு வேடங்களில் வருவதாகவும், அதில் ஒரு வேடத்திற்கு ஜோடியாக தீபிகா படுகோனும், இன்னொரு வேடத்திற்கு ஜோடியாக மிருணாளும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தியில் இவர் நடித்திருக்கும் ஒரு சில படங்களும் ரிலீஸிற்கு தயாராக இருக்கின்றன.

மேலும் படிக்க | தனுஷுடன் டேட்டிங்: 'கவனமாக இருக்க வேண்டும்' மனம் திறந்த மிருணாள் தாக்கூர்!

மேலும் படிக்க | 2வது திருமணத்திற்கு பிறகும்..முதல் திருமண பாேட்டோவை டெலிட் செய்யாத சமந்தா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News