)
Actor Dhanush - Mrunal Thakur Dating Rumours: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டில் ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் பிறந்தனர். இதையடுத்து சினிமாவிலும் இரண்டு பேரும் ஒன்றாக பயணமும் செய்தனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருவரும் வெளியுலகத்தை பொறுத்தவரையில் நல்ல ஜோடியாக காணப்பட்டனர்.
சுமார் 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென கடந்த ஆண்டு பிரிந்தனர். சட்டப்பூர்வமாக இருவரும் விவாகரத்தையும் பெற்றுக்கொண்டனர். உறவினர்கள் இருவரையும் சேர்த்து வைக்க முயன்றும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிடிக்கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யாவை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நடிகர் தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயன்றுவருவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
தனுஷ் - மிருணாள் தாக்கூர் டேட்டிங் வதந்தி
சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களாகவே நடிகர் தனுஷ் பிரபல நடிகை மிருணாள் தாக்கூருடன் டேட் செய்வதாக கூறப்பட்டு வருகிறது. சன் ஆஃப் சர்தார் 2 படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார். இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டதும், அந்த நிகழ்ச்சியில் மிருணாள் தாக்கூர் உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இருவருக்கும் இடையேயான கிசுகிசுவை மேலும் வலுப்படுத்தியது. ரசிகர்களும் இது காதல்தான், வரையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தனுஷுடனான இந்த வதந்தி குறித்து நடிகை மிருணாள் தாக்கூர் விளக்கம் அளித்து:ள்ளார்.
மிருணாள் தாக்கூர் விளக்கம்
சமீபத்தில் நடிகை மிருணாள் தாக்கூர் அளித்த பேட்டி ஒன்றில், தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரையும் இணைத்து சமீபமாக பல செய்திகள் பரவி வருவது எனக்கு தெரியும். அதை பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது. தனுஷ் சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனை யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அஜய் தேவ்கான்தான் அந்த நிகழ்ச்சிக்கு தனுஷை அழைத்தார் என தெரிவித்துள்ளார். மிருணாள் தாக்கூரின் இந்த பேட்டியின் மூலம் தற்போது இந்த கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ