Nalini Ramarajan Reuniting Rumors : நளினியும் ராமராஜனும் விவாகரத்து பெற்று 25 ஆண்டுகள் பெற்று, தற்போது மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Nalini Ramarajan Reuniting Rumors : தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்களும் நடிகைகளும் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம். அப்படி காதல் திருமணம் செய்து கொண்டவர்கள், நளினி ராமராஜன் தம்பதியினர். இவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்த நிலையில், தற்போது மீண்டும் இணைய இருப்பதாக இணையத்தில் செய்திகள் வைரலாகி வந்தது.
ராமராஜன்-நளினி காதல்:
தமிழ் திரையுலகில் தனக்கென தண்ணி ரசிகர் கூட்டத்தை சேர்த்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் போன்ற சில நடிகர்களுள் ஒருவர் ராமராஜன். இவருக்கு உச்சகட்ட புகழை கொடுத்தது கரகாட்டக்காரன் திரைப்படம்தான். இந்த படத்திற்கு பிறகு நடிகை நளினியை இவர் காதல் திருமணம் செய்து கொண்டார்.
ராமராஜன், உதவி இயக்குநராக பணியாற்றிய காலத்தில், நளினி ஹீரோயின். அப்போதுதான், இருவருக்குள்ளும் காதல் பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. முதலில் ராமராஜன் நளினியை ஒருதலையாக காதலித்ததகாவும் அந்த சமயத்தில் அவர் தனக்கு காதல் கடிதம் எல்லாம் எழுதி கொடுத்ததாகவும் நளினி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
நளினி-ராமராஜனின் திருமணம், 1987ஆம் ஆண்டில் நடந்தது. இந்த திருமணம், நடிகரும் முதல்வருமான எம்.ஜி.ஆர் தலைமையில் நடந்தது. இதன் பிறகு நளினி சினிமாவில் பெரிதும் நடிக்கவில்லை. இவர்களுக்கு அருணா, அருண் என இரு குழந்தைகளும் பிறந்தது. இதையடுத்து 2000ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
மீண்டும் சேர்கிறார்களா?
நளினி-ராமராஜனின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதை நளினியும் ராமராஜனும் கணவன்-மனைவி என்றில்லாமல், தாய்-தந்தையாக சேர்ந்து நடத்தி வைத்தனர். இதையடுத்து, சமூக வலைதளங்கள் முழுவதும் ஒரு தகவல் பரவியது.
நளினியும், ராமராஜனும் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்வதாகவும், இருவருக்குள்ளும் மீண்டும் காதல் துளிர் விட்டிருப்பதாகவும் சிலர் எழுதினர். இதையடுத்து, நடிகர் ராமராஜன் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
இப்படி பரவும் அனைத்து செய்திகளும் வெறும் வதந்திதான் என்று கூறிய இவர், நாங்கள் இருவரும் இணைந்து விட்டதாக கூறுவது முற்றிலும் பொய் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நடக்காத ஒரு விஷயத்தை பற்றி ஏன் அனைவரும் இப்படி நடந்தது போல பேசுகின்றனர் என்று தெரியவில்லை என கூறியிருந்தார். இப்போது தானும் நளினியும் ஒன்றாக இல்லை என்று கூறிய அவர், அதன் பிறகு அப்படியொரு சம்பவம் நடக்க, எதிர்காலத்திலும் வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார். இப்படிப்பட்ட கட்டுக்கதைகளை படிக்கும் போது, மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
தொடரும் காதல்...
நளினி, இப்போது அவ்வப்போது பல சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் கொடுத்து வருகிறார். அதில், நளினி கொடுத்திருந்த ஒரு பேட்டியில், தனக்கு இன்னமும் ராமராஜன் மீது காதல் இருப்பதாகவும், என்ன ஆனாலும் அவர் மீதிருக்கும் மரியாதை குறையாது என்றும் தெரிவித்டிருந்தார். இவரும் தாங்கள் இணைந்து விட்டதாக பரவும் வதந்திகளுக்கு பதிலளித்திருந்தார். இது போன்ற விஷயங்கள் தனக்கு மிகுந்த மன துயரத்தை ஏற்படுத்துவதாக கூறியிருந்த அவர், இதற்கு மேலாவது இப்படி செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ