)
சிம்பு நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக முதலில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் என்று பார்க்கலாம்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் வெளியான நகைச்சுவைத் திரைப்படம் இது நம்ம ஆளு. பாண்டிராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா ஜெரெமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் சூரி, ஜெயபிரகாஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை டி. ராஜேந்தர் தயாரித்துள்ளார். டி. ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டுவந்த இப்படம் 2016 ஆண் ஆண்டில் தான் வெளியானது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தனது நண்பனும் சாரதியுமான வாசுவுடன் (சூரி) பணிபுரிகிறான் சிவா (சிம்பு). சிவா மைலாவின் (நயன்தாரா) மேல் விருப்பம் கொள்ள அவளிடம் தனது விருப்பத்தை தெரிவிக்கிறான். மைலா சிவாவிடம் அவனுடைய முன்னாள் காதலி பற்றி வினவுகிறாள். முன்னாள் காதலி சிவாவினுடைய காதலை அங்கிகரிப்பதுடன் பின்னர் அவர்களுடைய திருமணம் நிகழாது என்றவுடன் இருவரும் பிரிகின்றனர். ஆனால் மைலாவோ திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். அதன் பின்னர் மைலா சிவாவிடம் அவனுடைய முன்னாள் காதல் பற்றி கேட்டு அவனை மிக ஆழமாக காதலிக்கிறாள். ஒரு சிறிய பிரச்சினை காரணமாக இருவரின் திருமணமும் நிற்கிறது. இதனால் மைலா தற்கொலை செய்ய முயன்றபோது சிவாவினுடைய தந்தை அவளை காப்பாற்றுகின்றார். பின்னர் இருவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை பிறக்கிறது இது தான் படத்தின் கதையாகும்.
இந்த படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என்றாலும். சிம்பு நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒன்றாக நடித்திருந்தனர், இதனால் படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு இருந்தது.
இதனிடையே முதலில் இந்த படத்தில் நடிக்கவிருந்தது நடிகை நஸ்ரியா என்றும், பின்னர் திடீரென இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என நினைத்துள்ளார் பாண்டிராஜ். பின் இதுகுறித்து சிம்புவிடம் கேட்க, 'நயன்தாராவிற்கு ஓகே என்றால் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை' என அவர் கூறியுள்ளார். அதன்பின் நயன்தாராவிடம் பேசப் பட்ட விலையில், சிம்புவுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என நயன்தாரா கூற, கதையை கூறினார் இயக்குனர் பாண்டிராஜ். அவருக்கு கதை பிடித்துப்போக இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சம்மதித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ