)
Actress Nivetha Pethuraj Marriage: நடிகைகளின் திருமணம் என்பது எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் ஷாக் கொடுக்கும் செய்திதான். பல நடிகைகள் குறித்து கிசுகிசுக்கள் வெளியாகும்போதே ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துவிடுவார்கள். ஏனென்றால் இனி அந்த நடிகை அடுத்து படங்களில் நடிப்பாரா, இனி அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துவிடும்.
இது ஒருபுறம் இருக்க, நடிகைகள் பலரும் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது திருமணம் குறித்த முடிவை எடுக்க மாட்டார்கள், சில விதிவிலக்குகளும் உண்டு. அப்படியிருக்க, நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள அவரது திருமண அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தி உள்ளது. பல நடிகைகள் வரிசையில் நிவேதா பெத்துராஜும் கிசுகிசுவில் சிக்காமல் இல்லை. அந்த வகையில், அனைத்து கிசுகிசுக்களையும் தவிடுபொடியாக்கி உள்ளார், நிவேதா பெத்துராஜ்.
தமிழ் பேசும் நடிகைகளின் பட்டியலில் நிவேதா பெத்துராஜும் ஒருவர். மதுரையில் பிறந்த இவர், கோவில்பட்டியில் தனது பள்ளிப் படிப்பை பயின்றுள்ளார். 11 வயதில் இவரது குடும்பம் துபாய்க்கு குடிபெயர்ந்துள்ளது. அங்கு 10 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில், ஸ்காட்லாந்தில் உயர்க்கல்வியை பயின்றுள்ளார். மேலும், 2015ஆம் ஆண்டில் மிஸ் இந்தியா யூஏஇ போட்டியில் மகுடம் சூடிய இவர், அதே 2015இல் Miss India Worldwide போட்டியில் இறுதிப்போட்டியாளராக தேர்வாகி 5வது இடத்தில் நிறைவு செய்திருக்கிறார். அதற்கு பின் ஒரே ஆண்டில் அவருக்கு தமிழ் சினிமாவில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது.
நிவேதா பெத்துராஜ் 2016ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சுமார் 10 ஆண்டுகள் அவர் திரைத்துறையில் பணியாற்றி இருக்கிறார் எனலாம். 2016இல் இவரது நடிப்பில் வெளியான 'ஒருநாள் கூத்து' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது, அதில் இவர் தினேஷிற்கு ஜோடியாக சிறப்பாக நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதே ஆண்டில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான 'பொதுவாக எம்மனசு தங்கம்' திரைப்படமும் நல்ல கவனத்தை பெற்றது.
திக் திக் திக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல், Boo உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கி பல வருடங்களாக வெளிவராமல் முடங்கியிருக்கும் பார்ட்டி திரைப்படத்திலும் நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார். நிவதா பெத்துராஜ் தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வந்தார் எனலாம். குறிப்பாக, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அள வைகுண்டபுரம்லோ படத்தில் இவர் துணை நடிகராக நடித்திருப்பார்.
இருப்பினும் நிவேதா பெத்துராஜ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தாலும் போதிய பட வாய்ப்புகள் இல்லை எனலாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இவர் நடிப்பில் திரைப்படங்கள் வெளியாகவே இல்லை. இந்த சூழலில் இவருக்கு இனி மார்க்கெட் இல்லை என பேசப்பட்டு வந்தது. ஆனால் அவர் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் சில தொடர்களில் நடித்து வருவதும் கவனிக்கத்தக்கது. திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸ்ஸிங்கிலும் நிவேதா கலக்கி வருகிறார்.
இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் தனது திருமண செய்தியை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது வருங்கால கணவர் உடனான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் 'தங்கமே உன்னை தேடி வந்தேன் நானே...' என்ற நானும் ரவடி தான் படப்பாடலை பின்னணியாக வைத்திருந்தார். அதில் அவரின் நண்பர்களும், சினிமா உலகத்தினரும் அவருக்கு தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவரது வருங்கால கணவரின் இன்ஸ்டா பக்கத்தையும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
நிவேதா பெத்துராஜ் ரஜித் இப்ரான் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர் மாடலிங் துறையில் இருப்பதாகவும், பெரிய தொழிலதிபர் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் நிவேதா பெத்துராஜ் திருமணம் எப்போது உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அவரது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ