)
Pooja Hegde Salary In Coolie : தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர், பூஜா ஹெக்டே. இவர், கூலி திரைப்படத்தில் ‘மோனிகா’ எனும் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்த படத்திற்காக இவர் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கூலி திரைப்படம்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம், கூலி. இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஸ்ருதி ஹாசன், செளபின் சாகிர், உப்பேந்திரா, நாகார்ஜுனா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படமும், வழக்கம் போல லோகேஷ் கனகராஜ்ஜின் கேங்ஸ்டர் ட்ராமா ஸ்டைலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் ‘காவாலா’ பாடலுக்கு, தமன்னா நடனமாடியிருந்தார். அதே போல தற்போது கூலி படத்திலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
மோனிகா பாடல்:
பூஜா ஹெக்டே நடனமாடியிருக்கும் கூலி பட பாடலுக்கு ‘மோனிகா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இந்த பாடலுக்கும் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். இதில் பூஜா மற்றும் செளபின் சாகிரின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
பூஜா, இந்த பாடலை தவிர வேறு எங்கும் படத்தில் நடிக்கவில்லை. இருப்பினும், அவர் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாட சம்பளமாக பெற்றிருக்கும் தொகை பலரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறது.
பூஜாவின் சம்பளம்:
பூஜா, ‘மோனிகா’ பாடலுக்கு நடனமாட ரூ.2-3 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஒரு படத்திற்கே ரூ.3-5 கோடி வரை சம்பளம் வாங்கும் நிலையில், ஒரு பாடலுக்கு மட்டும் இத்தனை கோடி வாங்கியிருப்பது பலரையும் அச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பூஜா நடனமாடிய பாடல்கள்:
நடிகை பூஜா, மோனிகா பாடலில் மட்டுமல்ல, ரெட்ரோ படத்தில் இடம் பெற்றிருந்த ‘கனிமா’ பாடலுக்கும் நன்றாக நடனமாடியிருந்தார். அதற்கு முன்னர் அரபிக் குத்து, அதற்கும் முன்னர் புட்ட பொம்மா என்று தனது நடனத்தால் பலரை கிரங்கடித்திருக்கிறார்.
பூஜா ஹெக்டே:
பூஜா ஹெக்டே, முதன்முதலில் அறிமுகம் ஆனது தமிழில் வெளியான ‘முகமூடி’ திரைப்படம் மூலமாகத்தான். இந்த படத்தில் நடித்த போது, அவருக்கு தமிழும் தெரியாது, சரியாக நடிக்கவும் வராது. பல காட்சிகளில் சிரித்த முகத்துடன் மட்டுமே தோன்றுவார். இதனால், படம் வந்த புதிதில் இவரை பலரும் ட்ரோல் செய்தனர். இதனால், தமிழ் திரையுலகிற்கு ஒரு பெரிய கும்புடு போட்டு விட்டு கிளம்பிய இவர், பின்பு தெலுங்கு திரையுலகில் பெரும் நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்ததார்.
அங்கு இவர் நடித்த ரங்காஸ்தலம், அல வைகுந்தபுரம் உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் அடித்தன. இவர் மீண்டும் தமிழுக்கு வந்தது, விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் மூலமாகத்தான். ஆனால், இந்த படமும் பெரிய வெற்றியை அடையவில்லை. இதன் பிறகு, ரெட்ரோ படத்தில் நடித்தார். தற்போது, விஜய்க்கு 2வது முறை ஜோடி ஆகியிருக்கிறார். ஜன நாயகன் படத்தில் இவர்தான் கதாநாயகி. இந்த படத்தின் தனது பங்கு ஷூட்டிங்கை சமீபத்தில்தான் நடித்து முடித்திருந்தார். பூஜா, தொடர்ந்து இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். கூலி படத்திற்கு பிறகு ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட மீண்டும் இவருக்கு பல படங்களில் இருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ