JBS குழுமம் சார்பில் துபாயில் அல் மம்சாரில் உள்ள செஞ்சுரி மாலில் வணிக மேலாண்மை புதிய கிளையைத் திறக்கப்பட்டது. இதில் தென்னிந்திய நடிகை ஷம்னா காசிம் (பூர்ணா) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிக நிறுவனத்தை திறந்து வைத்தார். வணிக அமைப்பு சேவைகளில் 25 ஆண்டுகால புகழ்பெற்ற JBS குழுமம் சார்பில் துபாயில் அல் மம்சாரில் உள்ள செஞ்சுரி மாலில் வணிக மேலாண்மை புதிய கிளையைத் திறக்கப்பட்டது.
மேலும் படிக்க | தக் லைஃப் படத்தால் லாபமடைந்த ஒரே ஆள்! கமல், மணிரத்னம் இல்லை-யார் தெரியுமா?
JBS குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஷானித் ஆசிஃபாலியின் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில், தென்னிந்திய நடிகை ஷம்னா காசிம் (பூர்ணா) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வணிக நிறுவனத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அகமது பெட்வாவி, அப்துல் அஜீஸ், சுல்பிகர் அலி, ராகுல் பாப்பி மற்றும் முஹம்மது சாதிக் உள்ளிட்ட தொழிலதிபர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
புதிதாக திறக்கப்பட்ட வணிக மேலாண்மை அலுவலகத்தில், துபாய் பொருளாதாரத்துறை சேவை, குடிவரவு சேவை, எமிரேட்ஸ் ஐடி தட்டச்சு சேவை, துபாய் நகராட்சி ஆன்லைன் சேவை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கிளை முழு அளவிலான அரசு மற்றும் அரசு சாரா ஆவண அனுமதி சேவைகளை வழங்கும் என்று JBS குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஷானித் ஆசிஃபாலி தெரிவித்துள்ளார். விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு பல ஆண்டுகளாக அவர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் ஆதரவிற்காக மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் படிக்க | அரசியலுக்கு வரும் முன்பே..அரசியல் பேசிய விஜய்யின் பாடல்கள்! அத்தனையும் சூப்பர் ஹிட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









