)
தெலுங்கு, தமிழ், கன்னடன் மற்றும் ஹிந்தி என பான் இந்தியா படங்களில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா, மேக்கப் இல்லாமல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக விளங்கி வருகிறார், ராஷ்மிகா மந்தனா. தமிழிலும் கார்த்தி, விஜய் உள்ளிட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர் இப்போது பாலிவுட் பக்கம் சென்று விட்டார். கன்னட திரையுலகில் முதன்முதலில் அறிமுகமான இவர், பின்பு தெலுங்கில் வெளியான கீத கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார்.
முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தெலுங்கு, கன்னடப் படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனா, பின்னர் விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ்த் திரையுலகிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இதனிடையே பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'அனிமல்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து நடிகை ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா நட்சத்திரமாக உயர்ந்தார். இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு வெளியான தனுஷின் 'குபேரா' திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆயுஷ்மான் குரானா உடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் ஹிந்தித் திரைப்படம் 'தம்மா' (Thamma). இந்த படம் நேற்று முந்துணம் அதாவது அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. தற்போது ராஷ்மிகா இந்தி திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில், அவரது முக்கிய வெளியீடுகளில் ஒன்றாகும் இது இருக்கிறது. இந்தத் திரைப்படம் ஒரு ஹாரர்-காமெடி (Horror-Comedy) வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் 42 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதால், வரும் நாட்களில் வசூல் அதிகரித்தால் மட்டுமே அது தோல்வியைத் தவிர்க்க முடியும்.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா எப்போதுமே எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் அங்கு ட்ரெண்டியான லுக்கில் மேக்கப் உடன் தான் வருவது வழக்கம். ஆனால், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு அவர் சுத்தமாக மேக்கப் இல்லாமல் வந்திருக்கிறார். அவருடைய அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் கண்ணாடி அணிந்து, சாதாரணமான கருப்பு டி-ஷர்ட் மற்றும் வெள்ளை நிறம் கலந்த உடையில் கலகலப்பாகப் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்க்க முடிந்தது. இந்தக் காணொளியைக் கண்ட அவரது ரசிகர்கள் அவரது இயல்பான தோற்றத்தையும், புன்னகையையும் பாராட்டி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ