Samantha Net Worth 2025: இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடும் சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.
தென்னிந்தியாவின் நட்சத்திர நாயகியாக விளங்குபவர், நடிகை சமந்தா. பானா காத்தாடி படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல தமிழ் படங்களின் நடித்து ரசிகர்களின் மனங்களின் இடம்பெற்றார். தற்போது இந்திய அளவில் பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திரை நட்சத்திரங்கள் சிலரை டேட்டிங் செய்த போதிலும், இவர் காதலில் விழுந்தது, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிடம்தான்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் ஜோடியாக நடித்த இவர்கள், அப்போது நல்ல நண்பர்களாக இருந்தனர். வருடங்கள் உருண்டோட, சில படங்களில் ஒன்றாக சேர்ந்து நடிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து, இவர்களுக்குள் இருந்த நட்பு நாளடைவில் பெரிய நெருக்கமாக மாறி, பின்னர் காதலுக்கு வழி வகுத்தது. சில ஆண்டுகள் காதலித்த பிறகு, இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பெரிய அளவில், நடந்த இவர்களின் திருமணம், 3 ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. 2021ஆம் ஆண்டில் இருவருமே பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர்.
நடிகை சமந்தா, தனது விவாகரத்து காலத்தில் மனமுடைந்து இருந்ததை அனைவராலும் கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால், தங்கள் திருமண வாழ்க்கையில் என்ன பிரச்சனை என்பது குறித்தோ, தாங்கள் ஏன் விவாகரத்து பெற்றனர் என்பது குறித்தாே இருவருமே வெளியில் பேசிக்கொள்ளவில்லை. இந்த விவாகரத்திற்கு பிறகு சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின. இப்படி சமந்தாவின் வாழ்வில் அடிக்கு மேல் அடி விழ, அவர் சில மாதங்கள் திரையுலகில் இருந்து விலகி பிரேக் எடுப்பதாக அறிவித்தார். இதனால், அவர் இப்போது வரை எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார்.
இதனிடையே இவர் சமீபத்தில் சிட்டாடல்: ஹனி பனி தொடரில் பணியாற்றினார். இந்த தொடர் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தற்போது இவர் த்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். இந்நிறுவனம் தயாரிப்பில் ‘மா இண்டி பங்காரம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று அறிவிக்கப்பட்டது. மேலும் அண்மையில் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக 'சுபம்' திரைப்படத்தின் டீஸர் வெளியானது. மேலும் இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகை சமந்தா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி தற்போது சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதன்படி நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.101 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் ஒரு ஆடம்பரமான வீடும், சென்னையில் ஒரு வீடும் உள்ளது. கார்களை பற்றி பேசுகையில் ஜாகுவார் எக்ஸ்எஃப், போர்ஷே கேமன் ஜிடிஎஸ், ஆடி க்யூ7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-வேகன் போன்ற சொகுசு வாகனங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரெட்ரோ படத்தில் நடிக்க தேர்வான முதல் ஹீரோ..சூர்யா இல்லை! வேறு யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









