)
Samantha New House New Beginnings : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருப்பவர், சமந்தா. இவர், சமூக வலைதளங்களில் பெரிதாக தனது வாழ்க்கை குறித்து ஷேர் செய்வதில்லை என்றாலும், இவர் ஷேர் செய்யும் ஒரு சில விஷயங்களை பார்க்கும் ரசிகர்கள், ‘இதற்கு அது அர்த்தமா? இது அர்த்தமா?’ என்று இவர்களே சில விஷயங்களை நினைத்து கொள்வர். அப்படிதான், சமீபத்திய போட்டோ ஒன்று குறித்தும் பேசி வருகின்றனர்.
சமந்தாவின் சமீபத்திய பதிவு!
நடிகை சமந்தா, கடந்த சில ஆண்டுகளாகவே சினிமாவில் பெரிதாக ஆக்டிவாக இல்லாமல் இருக்கிறார். இருப்பினும் பிற நேர்காணல்கள் மற்றும் சினிமா விருது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ‘New Beginnings’ என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் ஒரு வீட்டின் வாசல் இருந்தது, அருகில் ‘SAM’ என்கிற லோகோ பொறிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள், அவர் புதிதாக வீடு வாங்கியிருப்பதாக கூறி வருகின்றனர்.
புது தொடக்கமா?
நடிகை சமந்தா, பிறப்பில் தெலுங்கு மொழி பேசுபவராக இருந்தாலும் நம்ம ஊரில் உள்ள பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவர்தான். சென்னையை சேர்ந்த இவர், மாடலிங் மற்றும் நடிப்பு துறைக்கு வந்த பிறகும் சில ஆண்டுகள் சென்னையில்தான் இருந்தார். அதன் பிறகு, நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு வேறு இடத்திற்கு மாறினார். அவரை விட்டு பிரிந்த பின்பு, மும்பையில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. பாலிவுட் தொடர்களிலும் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், அவர் அங்கேயே தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தாண்டி, இந்த வீட்டை அவர் மும்பையிலேயே வாங்கியிருக்கலாம் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
சமந்தாவுக்கு திருமணமா?
நடிகை சமந்தா, நாக சைதன்யாவை, 2017ல் காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவரும் 2021ல் பிரிந்தனர். இதையடுத்து சிங்கிளாக இருந்த இவர், இப்போது திரைப்பட துறையில் இருக்கும் ராஜ் நெடிமொருவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
ராஜ் நிடிமொரு ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால், இப்போது தனது மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிட்டெல் தொடரில் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்த போது இவருக்கும் சமந்தாவிற்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அவர்கள் எங்கும் வெளியில் பேசவில்லை. இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ