)
Sangeetha Explains Divorce Rumors With Krish : நடிகை சங்கீதாவும், அவரது கணவர் கிரிஷ்ஷும் பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையத்தில் கிசுகிசுக்கள் பரவியது. இதையடுத்து, அவரே இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
சங்கீதா-கிரிஷ் விவாகரத்து வதந்தி:
நடிகை சங்கீதாவும், பாடகர் கிரிஷ்ஷும் 2009ஆம் ஆண்டில் சில மாதங்களில் டேட்டிங் செய்த பின்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் திருவண்ணாமலை கோயிலில் நடந்தது. கோலிவுட்டின் சிறந்த-இணைபிரியா ஜோடிகளாக இவர்களும் இருக்கின்றனர். கடந்த ஆண்டு ஒரு பிரபல ரியாலிட்டி ஷோவில் சங்கீதா குறித்து கிரிஷ் பேசிய சில விஷயங்களும் பலரை மனமயக்கியது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.
சங்கீதா, தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். தனது இன்ஸ்டாகிராம் பேஜில் முதலில் இவர் “சங்கீதா கிரிஷ்” என்று பெயர் வைத்திருந்தார். ஆனால், சில நாட்களுக்கு முன்னர் இந்த பெயரை அவர் “சங்கீதா சந்தாரம்” என்று மாற்றியிருக்கிறார். வழக்கமாக நடிகைகள் பலர் விவாகரத்திற்கு முன்பு இப்படி இன்ஸ்டாவில் இருந்த தனது கணவர் பெயரை தூக்கி இருக்கின்றனர். இதனால், சங்கீதாவும் அவரது கணவர் கிரிஷ்ஷை பிரிகிறாரா என்கிற சந்தேகம் எழுந்தது.
சங்கீதா விளக்கம்:
சங்கீதாவின் விவாகரத்து குறித்த செய்தகள் வைரலாக பரவியதை அடுத்து அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சங்கீதா தனது விவாகரத்து வதந்தி குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அதில், தான் கிரிஷ்ஷை விவாகரத்து செய்வதாக வெளியாகியிருக்கும் செய்தி தவறானது என்று தெரிவித்துள்லார். மேலும், இன்ஸ்டாவில் ஏன் பெயர் மாற்றினேன் என்கிற கேள்விக்கும் பதில் கொடுத்துள்ளார். நியூமராலஜிக்காக இன்ஸ்டாவில் அவர் பெயருக்கு பின்னால் இருந்த கிரிஷ் என்கிற பெயரை நீக்கியதாக கூறியிருக்கிறார்.
சங்கீதாவின் துணிச்சல்:
நடிகை சங்கீதா, தமிழில் பல தனித்துவமான கதாப்பாத்திரங்களை தேர்ந்து நடிப்பதற்கு பெயர் போனவர். இவர், தமிழில் மட்டும் நடித்தது கிடையாது. மலையாளம் மற்றும் சில கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதே போல, பலர் திரையுலகில் இருக்கும் பிரச்சனைகளை பேச தயங்கும் சமயத்தில், தைரியமாக துணிந்து பேசியவர் சங்கீதா.
சில மாதங்களுக்கு முன்பு, தனக்கு தமிழ் திரையுலகில் நடிக்க பிடிக்காது என்று கூறியிருந்தார். ஏன் என்று கேட்ட போது, தமிழ் சினிமாவில் தனக்கு மரியாதையே கொடுக்கப்படுவது இல்லை என்றும், அவர்கள் தனக்கு தேடி வந்து வாய்ப்பு கொடுத்தாலும், நான் என்னமோ அவர்களை கெஞ்சி வாய்ப்பு கேட்பது போல தன்னை நடத்தியதாகவும் தெரிவித்தார். கூடவே, தனக்கு தெலுங்கு சினிமாவில் நிறைய மரியாதை கொடுக்கப்படுவதாகவும், அங்கு நிறைய வாய்ப்புகளும் இருப்பதாகவும் கூறினார். இதை கேட்டு பலர் தவறாக புரிந்து கொண்டு கொந்தளித்தனர்.
அதே போல, சங்கீதா தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக அவரது தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் சாட்டினார். பின்னர் சங்கீதாவும் அவரது கணவர் கிரிஷ்ஷும் காவல் நிலையத்தில் ஆஜராகி அதற்கு விளக்கம் கொடுத்ததை அடுத்து, அந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ