)
Sangeetha Krish Divorce Rumors : தமிழ் திரையுலகில், பிரபல நடிகையாக இருப்பவர் சங்கீதா. இவரும், பாடகர் கிரிஷ்ஷும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் பிரச்சனை என்றும், இவர்கள் விவாகரத்து வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சங்கீதாவின் படங்கள்:
தான் நடிக்கும் படங்களில், மக்கள் மனதில் நச்சென்று நிற்கும் கதாப்பாத்திரங்களை ஏற்று நடிப்பவர், சங்கீதா. பிதாமகன் படத்தில் வித்தியாசமான லீட் ரோலில் நடித்த இவர், சென்னையை சேர்ந்தவர். கங்கோத்ரி எனும் மலையாள படத்தில் அறிமுகமான இவர், அதன் பிறகு தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்தார். 90களிலும், 2000 காலக்கடத்தின் ஆரம்பத்திலும் ப்ரைம் ஹீரோயினாக இருந்தார். பிதாமகன் படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்திருக்கிறது.
சங்கீதா-கிரிஷ் திருமணம்:
சங்கீதா, மலையாள படங்களில் பிசியாக இருந்த சமயம் அது. ஒரு விருது விழாவில், பிரபல பின்னணி பாடகர் கிரிஷை சந்தித்தார். சில மாதங்கள் டேட்டிங் செய்த இவர்கள் பின்பு 2009ஆம் ஆண்டு திருவண்ணாமலை கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இப்போது அவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் இருக்கும் இணைபிரியா காதல் ஜோடிகளாக இவர்கள் இருப்பதாக ரசிகர்கள் அவ்வப்போது கூறுவதுண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை ஏன் எழுந்தது தெரியுமா?
பெயரை மாற்றிய சங்கீதா?
சங்கீதா, எப்போதாவது செலக்ட் செய்து படங்களில் நடித்தாலும், சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிறார். இதனால், தனது சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் பெயரை சமீபத்தில் மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னர், “Sangeetha Krish" என்று வைத்திருந்ததாகவும், இப்போது "Sangeetha.act" என்று மாற்றியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில்தான் கடைசியாக அவர் தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதன் பிறகு, அவருடனான புகைப்படங்கள் எதுவுமே இல்லை.
புகைப்படங்களை நீக்கவில்லை..
சங்கீதாவும் கிரிஷும் இன்னும் இருவரையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்துதான் வருகின்றனர். அது மட்டுமன்றி, இருவரும் ஒன்றாக இருக்கும் தங்களின் புகைப்படங்களையும், வீடியாேக்களையும் இன்னும் நீக்கவில்லை. சங்கீதாவும், தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை இன்னும் இன்ஸ்டா ஹைலைட்டாக வைத்திருக்கிறார். இதை பார்க்கையில் இருவரும் ஒன்றாக இருப்பது போல தெரிவதாக ரசிகர்கள் சிலர் கூறி வருகிறனர். இருப்பினும் சில ரசிகர்கள் இது குறித்த சந்தேக அலைகளை ஆதரித்து வருகின்றனர். சங்கீதா-கிரிஷ் பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் சில கிசுகிசுக்கள் பரவி வருகிறதே தவிர, அவர்கள் இருவரும் இது குறித்து இன்னும் எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சங்கீதா-கிரிஷ் பிரிவு குறித்த செய்தியை ஜீ தமிழ் செய்திகள் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சங்கீதா சிக்கிய சர்ச்சைகள்:
நடிகை சங்கீதா, இதற்கு முன்னர் ஒருமுறை தனக்கு தமிழ் திரையுலகில் நடிக்க பிடிக்காது என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். தமிழ் சினிமாவில், தன்னை பலர் மரியாதை குறைவாக நடத்தியதாகவும், இதனால் தனக்கு தமிழில் நடிக்க பிடிக்கவில்லை என்றும் கூறினார். தெலுங்கில் தான் படங்களில் நடித்து வருவதாகவும், அங்கு தன்னை மரியாதையாக நடத்துவதாகவும் கூறினார். இவரது கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு, பெரும் சரச்சையே வெடித்தது.
அதே போல, சங்கீதாவின் தாய் தன்னை, தனது மகள் வயதான காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் அந்த வீட்டை அவர் தன்னிடம் இருந்து பறிக்க முயல்வதாகவும் குற்றச்சாட்டினை விதித்தார். இதற்கு பதிலடி கொடுத்த சங்கீதா, தன்னை சிறுவயதில் பள்ளிப்படிப்பை பிடுங்கி சினிமாவில் நடிக்க வைத்ததாக சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டார். இது கடும் அதிர்வலைகளை அந்த சமயத்தில் ஏற்படுத்தியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ