)
கோயம்புத்தூர் நகரத்தை களமாகக் கொண்டு, ஒரு கல்லூரியில் நிகழும் மர்மமான கொலையையும் அதைச் சுற்றியுள்ள சம்பவங்களையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் தான் 'ரெட் லேபிள்'. இது ஒரு பரபரப்பான திரில்லர் கதை அம்சத்தைக் கொண்டது. இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். இந்த படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார், முழுக்க முழுக்க இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூர் நகரில் நடைபெற்றுள்ளது.
சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு செய்துள்ளார் லாரன்ஸ் கிஷோர். இந்த படத்தில் ஹீரோவாக லெனின் நடித்துள்ளார் மேலும் இவருக்கு ஜோடியாக அஸ்மின் நடித்துள்ளார். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில், முனிஷ்காந்த் நடித்துள்ளார்.
'ரெட் லேபிள்' தலைப்பு " இந்த பெயரைச் சொன்னதுமே டீ வகையின் பெயர் என்றோ,மது வகையின் பெயர் என்றோதான் நினைக்கலாம். ஆனால் இரண்டும் அல்ல.ரெட் என்பது புரட்சியையும் லேபிள் என்பது அடையாளத்தையும் குறிக்கும். அவ்வகையில் அடையாளத்தைத் தேடும் பல மனிதர்களின் கதையாகவும் இந்தப் படம் இருக்கும்.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ளார். பொதுவாக, சிம்ரன் பொது நிகழ்ச்சிகளில் அவ்வளவாக கலந்துகொள்ளாதவர். இருப்பினும், புதிய படக் குழுவினரை ஊக்குவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அவர் முதல் முறையாக இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
First Look Of #RedLabelMovie
— REVGENFILMFACTORY (@ranaprodoff) October 31, 2025
Starring #Lenin #AzminYasar
A film by #KrVinoth #RvUdayakumar@sak_studio @editorkishore #PhantomPradeep @Ponparthiban @REVGENFILMFAC @sridharraju6 pic.twitter.com/TNjhyP42Iw
திரைப்படத்தின் முக்கிய விவரங்கள்
இயக்குநர்: கே. ஆர். வினோத்
தயாரிப்பு: ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் லெனின்
கதை: பொன். பார்த்திபன்
முழுக்க முழுக்க படப்பிடிப்பு: கோயம்புத்தூர் நகரில் நடைபெற்றுள்ளது.
நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள்
கதாநாயகன்: லெனின்
கதாநாயகி: அஸ்மின்
முக்கியக் கதாபாத்திரம்: இயக்குநர் ஆர். வி. உதயகுமார்
கெளரவ வேடம்: முனிஷ்காந்த்
ஒளிப்பதிவு: சதீஷ் மெய்யப்பன்
இசை: கைலாஷ் மேனன்
படத்தொகுப்பு: லாரன்ஸ் கிஷோர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ