தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா. ராஞ்சித். இவர் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2012ஆம் ஆண்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். இப்படமும் நல்ல வர்வேற்பை பெற, இதையடுத்து கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதன் மூலம் அவருக்கு தனி ரசிகர் படை உருவானது.
கடைசியாக நடிகர் விக்ரமை வைத்து, தங்கலான் படத்தை இயக்கினார். இப்படத்தின் விக்ரமுடன் மாளவிக்கா மோகன், பார்வதி திருவோத்து, பிரீத்தி கரண், பசுபது உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கடந்த 2024 ஆக்ஸ்ட் மாதம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இயக்குநர் பா. ரஞ்சித் தற்போது வேட்டுவம் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.
மேலும் படிங்க: குட் பேட் அக்லி To டெஸ்ட்: ஏப்ரல் மாதம் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
வேட்டுவம் படத்தை கோல்டன் ரோஷியா பிலிம்ஸ் நிறுவனத்துடன் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், கதாநாயகனாகவும், நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார். மேலும், அசோக் செல்வன், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.
இந்த நிலையில், வேட்டுவம் படம் தொடர்பாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சோபிதா துலிபாலா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் பொண்ணியன் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









