Actress Soundarya Last Wish Before Death : நடிகை செளந்தர்யா, 20 வருடங்களுக்கு முன்பு தென்னிந்தியாவின் டாப் நடிகைகளுள் ஒருவராக விளங்கியவர். சௌந்தர்யாவின் உண்மையான பெயர், சௌமியா. இவர் பெரும்பாலும் நடித்தது தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் மட்டும்தான். அதை தாண்டி சில கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். 2004ஆம் ஆண்டு, ஹெலிகாப்டர் விபத்தில் இவர் உயிரிழந்தது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர், இறப்பதறகு முன்பு இவர் அண்ணியிடம் கேட்ட கடைசி ஆசை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செளந்தரியாவின் உயிரிழப்பு:
நடிகை சௌந்தர்யா, மிகக்குறுகிய ஆண்டுகளிலேயே பல நூறு படங்களில் நடித்து முடித்து விட்டார். அதிலும் தமிழில் அவர் நடிப்பில் உருவான படையப்பா, அருணாச்சலம், தவசி, சொக்க தங்கம் உள்ளிட்டவை முக்கியமான படங்களாகும். 12 வருட திரை வாழ்க்கையில் இவர் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், அவரை அரசியல் களமும் அழைத்தது. திரையுலகில் ஜொலித்துக்கொண்டிருக்கும் போதே, இன்னொரு பக்கம் பாஜக-விலும் இணைந்து அந்த கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரங்களை தொடங்கினார். 2004ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் தேதியன்று சௌந்தர்யா தனது அண்ணன் அமர்நாத்துடன் சேர்ந்து பிரவேட் விமானத்தில் பெங்களூருவில் இருந்து தெலங்கானாவிற்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில், விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டது. இந்த கோளாறு விமான விபத்துக்கு நேரிட்டது. இதில் கர்பிணியாக இருந்த செளந்தர்யா, உடல் சிதறி உயிரிழந்தார். அவரது அண்ணனும் அந்த விபத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவம், ஒட்டு மொத்த தென்னிந்தியாவையும் உலுக்கியது.
பவதாரிணியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா! என்ன செய்தார் தெரியுமா?
செளந்தர்யாவின் கடைசி ஆசை..
சௌந்தர்யா உயிரிழந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகி விட்டது. இந்த சமயத்தில், சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யாவின் அண்ணனின் மனைவி (அண்ணி) ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, சௌந்தர்யா, தனது உயிரிழப்புக்கு முன்னர் இரண்டு விஷயங்களை தன்னிடம் கேட்டதாக அவர் கூறியிருக்கிறார். தன்னுடைய நெருங்கிய தோழி போல இருந்த சௌந்தர்யா குறித்து மனமுருகி பேசிய அவர், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் சௌந்தர்யா தன்னிடம் ஒரு காட்டன் புடவையும் குங்குமமும் வேண்டுமென கேட்டதாக கூறியிருக்கிறார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த செளந்தர்யா, தான் கடைசியாக கேட்ட விஷயத்தை கூட, தனது அண்ணியிடம் இருந்து பெற முடியாமல் உயிரிழந்து விட்டதை நினைத்து ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
கொலையா? விபத்தா?
சௌந்தர்யா உயிரிழந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில் ‘இது விபத்தல்ல-கொலை’ என்று ஒருவர் கொடுத்துள்ள புகார் புயலை கிளப்பியுள்ளது. இது குறித்து சித்திமல்லு என்பவர் புகார் கொடுத்துள்ளார். அதில், சௌந்தர்யாவின் அண்ணன் சம்ஷாபாத் எனும் இடத்தில் 6 ஏக்கர் நிலத்தை சொந்தமாக வைத்திருந்ததாகவும், இதை நடிகர் மோகன் பாபு கேட்டு டார்ச்சர் செய்ததாகவும் கூறியிருக்கிறார். இதனால், சௌந்தர்யா-மோகன் பாபு இடையே அடிக்கடி மோதல் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.
சௌந்தர்யாவின் இறப்பிற்கு பிறகு, மோகன் பாபு அந்த நிலத்தை ஆக்கிரமித்து கொண்டதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால், சௌந்தர்யாவின் இறப்பு விபத்தா அல்லது கொலையா எனும் சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இவர் YSR Congress கட்சியின் முக்கிய உறுப்பினராக இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 20 வருடங்களுக்கு முன் உயிரிழந்த சௌந்தர்யா! விபத்தா? கொலையா? திடுக்கிடும் ட்விஸ்ட்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









