Sreeleela Starring Kiss Movie : நாகன் பிக்ச்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்க ஸ்ரீலீலா நாயகியாக நடிக்கும் படம் " கிஸ் மீ இடியட் " ஸ்ரீலீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்த " கிஸ் " படம் தமிழில் " கிஸ் மீ இடியட் " என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். மற்றும் ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதில், ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிரகாஷ் நிக்கி இசையமைத்திருக்கிறார், பாடல்களை மணிமாறன் எழுதியிருக்கிறார். கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய A.P.அர்ஜுன் தமிழிலும் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 23-04-2025 அன்று பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பராசக்தி பட நாயகி..
ஸ்ரீலீலா தெலுங்கு,கன்னடம் , இந்தி படங்களில் நடித்து புகழ் பெற்றிருந்தாலும் தமிழுக்கு இதுவே முதல் படம். இவர் நடித்த புஷ்பா 2 சினிமா வரலாற்றிலேயே ஒரு மைல் கல்லாக வசூலில் மிகப் பெரிய சாதனை படைத்தது. இவர் அல்லு அர்ஜுன்,மகேஷ் பாபு ,ரவி தேஜா ,புனித் ராஜ்குமார், பாலகிருஷ்ணா ,ராம் பொத்தினேனி , நிதின் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்துவருக்கிறார்.
பராசக்தி திரைப்படத்தில் சில மாதங்களுக்கு முன்பு இணைந்த ஸ்ரீலீலா, அதில் அத்வாவிற்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் அவர் விண்டேஜ் கதாநாயகியின் தோற்றத்தில் காணப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. செண்டிமெண்ட் கலந்த இளமை ததும்பும் காதல் கதையாக கிஸ் மி இடியட் உருவாகி வருகிறது. இதனை பார்க்க பலரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | வெயிட் கூடாமல் இருக்க ஸ்ரீலீலா தினமும் 45 நிமிடம் ‘இதை’ செய்வாராம்! என்ன தெரியுமா?
மேலும் படிக்க | 23 வயதில் 3 குழந்தைகளுக்கு தாயான நடிகை! இன்னும் கல்யாணம் ஆகல-அவர் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









