)
Tamannaah South Actor Misbehaved : தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர், தமன்னா. இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, தன்னிடம் ஒரு தென்னிந்திய நடிகர் தவறாக நடக்க முயன்றார் என்று அவர் கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தென்னிந்திய திரையுலகில் தமன்னா:
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர், தமன்னா. இந்தியிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார். கேடி படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து, வியாபாரி, கல்லூரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் வெளியான கண்டேன் காதலை, பையா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்கள் பெரிய ஹிட் அடித்தன.
தெலுங்கிலும் மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் சமீப காலங்களாக இரு மொழிகளிலும் அவர் பெரிதாக நடிப்பதில்லை. பெரும்பாலும் இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இருப்பினும், அவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் நல்ல மார்கெட் இருக்கிறது.
சமீபத்திய நேர்காணல்:
நடிகை தமன்னா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது சினிமாவிற்கு வந்த புதிதில் தானும் சில கசப்பான சம்பவங்களை எதிர்கொண்டதாக கூறியிருக்கிறார். அதில் தன் மீதிருக்கும் வதந்திகள் மற்றும் திரைத்துறையில் தன்னைப்போன்று இருக்கும் பெண்களுக்கு இருக்கும் சவால்கள் குறித்தும் பேசினார்.
ஒரு தென்னிந்திய மொழி திரைப்படத்தில் நடிக்கும் போது, தன்னிடம் ஒரு பிரபல நடிகர் எல்லை மீறி நடக்க தொடங்கியதாக தமன்னா அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவரது இந்த செயல் தனக்கு சங்கடத்தை கொடுத்ததாக பேசிய அவர், “இது போன்று செய்தால் படத்தில் நடிக்க மாட்டேன்” என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, தன் செயலுக்கு அந்த நடிகர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து, அந்த நடிகர் மன்னிப்பு கேட்டதாகவும் தமன்னா தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த படத்தில் நடித்து முடித்து கொடுத்துள்ளார். இது போன்ற கசப்பான சம்பவங்கள், தனக்கு திரையுலகில் எழுந்திருப்பதாக தமன்னா தெரிவித்துள்ளார்.
யார் அவர்?
தனக்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தை கூறிய தமன்னா, அந்த பிரபலமான தென்னிந்திய நடிகர் யார் என்பதை எங்கும் தெரிவிக்கவில்லை. இதனால் அந்த நடிகர் யார் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது.
தமன்னா இப்போது என்ன செய்கிறார்?
நடிகை தமன்னா, கடைசியாக தமிழில் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து அவர் தமிழில் பெரிதாக எந்த ரோலிலும் நடிக்கவில்லை. இந்தியில் இவர் நடித்திருக்கும் ரோமியோ, ரேஞ்சர், ஐபிஎஸ் மரியா உள்ளிட்ட 4 படங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் ரிலீஸிற்காக தமன்னா காத்துக்கொண்டுள்ளார்.
தமன்னாவும் இந்தி நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு கூறப்பட்டது. ஆனால், அவர்கள் சமீபத்தில் பிரேக்-அப் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்போது விஜய் வர்மா வேறு ஒரு நடிகையை டேட்டிங் செய்ய, தமன்னா சிங்கிளாக தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ