கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியை சேர்ந்த 10 பேரிடம் ரூபாய் 60 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், நடிகை தமன்னா மற்றும் காஜல் அகர்வாலின் விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம் பலரிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். மேலும் இது சம்பந்தமாக நிதிஷ் ஜெயின் (36), அரவிந்த் குமார் (40) ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் படிங்க: உலக அழகியா இருந்தாலும்..வீட்டில் தினமும் இந்த விஷயங்களை கட்டாயம் செய்வார்கள்!
இதற்கிடையில், கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவலகள் வெளியானது. தொடக விழா மற்றும் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளம்பரப்படுத்தியதால், அவர்கள் இருவரும் பங்குதாரர்களாக இருக்கலாம் என சந்தேகத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
நடிகை தமன்னா பரபரப்பு அறிக்கை
இந்த நிலையில், நடிகை தமன்னா தன் மீதுள்ள புகாருக்கு மறுப்பு தெரிவித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கிரிப்டோ கரன்சி முறைகேட்டில் எனக்கு தொடர்பிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளை பார்த்தேன். இது போன்ற தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக ஊடகத்தில் பணிபுரியும் என் நன்பர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அதே நேரத்தில் இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எனது குழுவினர் எடுத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









