Actress Trisha Talks About Her Marriage : தமிழ் திரைகளுக்கு கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக வலம் வருபவர், த்ரிஷா. அப்போது இவருக்கு 41 வயது ஆகிறது. பல ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், இவர் எப்போது நேர்காணலில் கலந்து கொள்ளும் போதும் இவரிடம் கேட்கப்படும் ஒரே கேள்வி “உங்களுக்கு எப்போ கல்யாணம்?” என்பதுதான். அப்படி ஒரு கேள்வி சமீபத்தில் கேட்கப்பட்டதற்கு அவர் கொடுத்துள்ள பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிங்கிளாக வலம் வரும் திரிஷா:
திரையுலகில் இருக்கும் நடிகர் நடிகைகள், தங்களுக்கு தோன்றும் நேரத்தில் திருமணம் செய்து கொள்வர் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு சில நடிகர் நடிகைகள் தங்களின் 40களை கடந்தும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். அப்படி இன்னும் சிங்கிளாகவும் இளமையாகவும் இருக்கும் நடிகைகளில் ஒருவர், த்ரிஷா.
இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன், பெரிய தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருந்தது. நான் எந்த திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்றுவிட்டது. என்ன காரணம் குறித்து எதுவும் வெளியில் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து பல ஆண்டுகளாக, சிங்கிளாக இருக்கும் இவரிடம் எப்போது திருமணம் என, பலர் கேட்பது உண்டு.
தக் லைஃப் பட விழா:
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் அவருடன் 37 வருடங்கள் கழித்து நடித்திருக்கும் படம், தக் லைஃப். இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து, சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் முதல் சிங்கள் பாடலன ஜிங்குச்சா நேற்று வெளியானது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதையடுத்து இப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. அப்படி, த்ரிஷா, கமல் மற்றும் சிலம்பரசன் கலந்து கொண்ட விழா மேடையில், திரிஷாவின் திருமணம் குறித்து கேட்கப்பட்டது.
த்ரிஷா கொடுத்த பதில்..
தன்னை நோக்கி வரும் திருமண கேள்விகளை எப்படி உஷாராக சமாளிப்பது என்பது த்ரிஷாவிற்கு தெரியும். அப்படி மேடையில் தன்னிடம் துவக்கப்பட்ட கேள்விக்கு, “திருமணம் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நடந்தாலும் ஓகே நடக்கவில்லை என்றாலும் ஓகே” என்று கூறியிருக்கிறார். இதற்கு கமல்ஹாசன் கொடுத்த ஒரு பதிலும் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரல் ஆகி வருகிறது.
இதுவரை இருந்த காதல் உறவுகள்..
நடிகை த்ரிஷாவை, தமிழ் நாட்டில் பலருக்கு பிடிக்கும். காரணம், அவரது அழகு மட்டுமல்ல, அவர் பிறரிடம் நடந்து கொள்ளும் விதமும், கனவுடன் மற்றவர்களிடம் பேசும் அழகும்தான். என்னதான் அவர் தனது கெரியரின் உச்சத்தில் இருந்தாலும், அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாதது மட்டும் பெரும் குறையாக பார்க்கப்படுகிறது. இவர், தனது நெடுங்கால நண்பரும் நடிகருமான ராணாவுடன் சில நாட்கள் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகுதான், அவருக்கு வருண் மணியனுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து பின்பு அதுவும் நின்று போனது.
த்ரிஷா, சில நாட்களுக்கு முன்பு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இது, அவர்கள் இருவரும் நெருக்கமான உறவில் இருக்கின்றனரோ என்ற சந்தேகத்தை கிளப்பியது. விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு தனி விமானத்தில் பறந்தது, அவருடைய தி கோட் படத்தில் ஐட்டம் பாடலுக்கு ஆடியது என த்ரிஷா செய்த சில விஷயங்கள் இந்த சந்தேக தீயை மேலும் எரிய செய்தது. இருப்பினும் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டும்தான் என சிலர் வெளியில் பேசிக்கொள்கின்றனர்.
மேலும் படிக்க | காதலில் விழுந்த த்ரிஷா? இன்ஸ்டாவில் ஓப்பனாக வெளியிட்ட பதிவு!
மேலும் படிக்க | 41 வயதில் கல்யாண பொண்ணாகும் த்ரிஷா? வைரலாகும் போட்டோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









