)
திரையுலகினர் மத்தியில் பேரிடியாய் இறங்கிய ஒரு செய்தி, இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜின் மறைவுதான். சில நாட்களுக்கு முன்பு கூட, தன்னுடைய குடும்ப நண்பர் குஷ்புவின் மகள் திருமணம் கோவாவில் நடந்த போது அதில் கலந்து கொண்ட பாக்யராஜ், திரும்பி வந்த சில தினங்களில் மாரடைப்பால் உயிரிழந்தது அவருடைய குடும்பத்தினரை நிலைகுலைய செய்தனர். இந்த நேரத்தில், இறுதி சடங்கு வேலைகளை எடுத்து கவனித்து, குடும்பத்தினருக்கும் உறுதுணையாய் ராதிகா, பார்த்திபன் உள்ளிட்ட சில நெருங்கிய குடும்ப நண்பர்கள் உடனிருந்தார்கள். ஆனால், இவர்களையும் தாண்டி ரசிகர்களின் கண்கள் தேடியது, நடிகை ஊர்வசியைதான்.
பாக்யராஜ், ஜூன் 27ஆம் தேதியன்று இன்னுயிர் நீத்தார். இதற்கு மறு நாள் இறுதி சடங்கு நடைப்பெற்று, அவருடைய உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாக்யராஜுக்கு மரியாதை செலுத்துவதற்காக நடிகர்கள் ரஜினிகாந்த் முதல், முதல்வர் விஜய் வரை பல பேர் அவருடைய இல்லத்திற்கு வந்திருந்தனர். இதைத்தாண்டி, பல நூறு பொது மக்களும் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த சமயத்திலும், இதில் கலந்து கொள்ளாதவர்களை தேட, யாரும் மறக்கவில்லை.
பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர், ஊர்வசி. இந்த படத்தில் நடித்த போது அவருடைய வயது, வெறும் 13தான். இவரை பாக்யராஜ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தி இருந்ததாலும், நடிப்பு சொல்லிக்கொடுத்ததாலும், இவரை தன்னுடைய ஆசானாகவே ஏற்றுக்கொண்டார் ஊர்வசி. அப்படியிருக்கையில், இவர் ஏன் பாக்யராஜின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை என்கிற கேள்வி அனைவரின் மனங்களிலும் எழுந்தது.
நடிகை ஊர்வசி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, பாக்யராஜின் இறுதி ஊர்வலத்தில் அவர் கலந்து கொள்ளாதது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தான் அங்கு வந்திருந்தால் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்பேன் என்று தெரியும் என்றும், அவரை அப்படி படுக்கையில் பார்க்க தன்னால் முடியாது என்றும், தன் எமோஷனை கட்டுப்படுத்தவும் முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், இது குறித்து பாக்யராஜின் ஆத்மாவிற்கும், அவருடைய குடும்பத்திற்கு தெரியும் என்றும், அவருடைய மிகச்சிறந்த மாணவி நான் என்றும் தெரிவித்திருந்தார்.
பாக்யராஜும் ஊர்வசியும் ஒன்றாக ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், பாக்யராஜ் இயக்கிய மற்றும் கதை எழுதிய படங்களில் ஊர்வசி நடித்திருக்கிறார். மேலும், சுயம்வரம் திரைப்படத்திலும் இருவரும் ஒன்றாக நடித்திருக்கின்றனர்.
பூர்ணிமா பாக்யராஜிடம் தான் பேசியதாகவும், தன்னை பொறுத்தவரையில் பெரிய அளவிலான பாதிப்புகளை தாங்கிக்கொள்ளும் சக்தி தனக்கு இல்லை என்றும் பேசினார், ஊர்வசி. மீடியா முன்னிலையில் டிராமா செய்ய வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று தெரிவித்த அவர், தான் எப்போதும் சிரித்து பேச வேண்டும் என்பதே பாக்யராஜின் விருப்பமாக இருந்ததாகவும், தான் அழுதால் பாக்யராஜுக்கு பிடிக்கவே பிடிக்காது என்றும் கூறியிருந்தார். மேலும், அவர் படுத்திருப்பதை பார்ப்பதற்கு தனக்கு சக்தி கிடையாது என்று கூறிய அவர், இன்னும் தன் மனதில் கோட் சூட் போட்டபடி அவர் அழகாக இருப்பதாக ஊர்வசி தெரிவித்திருந்தார்.
ஊர்வசியின் இந்த பதில், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.