Varalaxmi Sarathkumar Tragic Childhood Story Viral Video : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் வரலட்சுமி. சரத்குமாருக்கும் அவரது மூத்த மனைவிக்கும் பிறந்த இவர், தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரிய நடிகையாக விளங்குகிறார். இந்த நிலையில் அவர் தனக்கு நடந்த கொடுமை குறித்து ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வரலட்சுமி பகிர்ந்த விஷயம்..
நடிகை வரலட்சுமி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருக்கிறார். அவருடன் சினேகா உள்ளிட்ட சில பிரபலங்களும் கூட நடுவர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் நடனத்தை பார்த்து அதற்கு விமர்சனங்களை கொடுத்து மார்க் போட்டு வருகிறார் வரலட்சுமி. அப்போது, ஒரு குறிப்பிட்ட தீமை அல்லது கதையை வைத்து சிலர் நடனமாடுவது வழக்கம். இதில் போட்டியாளராக இருக்கும் கெமி, பாலியல் வன்கொடுமைகைளை வைத்து நடனமாடியிருக்கிறார். இதை பார்த்த வரலட்சுமி, இது குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.
“நான் சிறு வயதில் இருந்த போது, அப்பா-அம்மா இருவருமே வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது என்னை பார்த்துக்கொள்ளுமாறு சிலரது வீடுகளில் விட்டு விட்டு செல்வார்கள். அப்போது, குழந்தையாக இருந்த என்னை 5-6 பேர் பாலியல் வன்புனர்வு செய்துள்ளனர். உங்களது கதை, என்னுடைய கதையும் கூட” என்று கூறி, கெமியை கட்டிப்பிடித்தார். இதை பார்த்து, அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருந்த ரவீனா, நடுவராக இருந்த சினேகா உள்ளிடட் அனைவரும் அழுதனர். பின்னர் அனைவரும் கட்டிப்பிடித்துக்கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் திருமணம் நடந்தது..
வரலட்சுமி சரத்குமார், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிக்கோலாய் சாச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நிக்கோலாயிற்கு ஏற்கனவே திருமணமாகி வயது வந்த மகள் இருக்கிறார். இவர்களது திருமணம், திரையுலகினர் அனைவரையும் பெரிதாக திரும்பி பார்க்க வைத்தது.
நிக்கோலாய் சாச்தேவ், பிரபலங்களை போட்டோ எடுக்கும் போட்டோகிராஃபர். இது மட்டுமன்றி பெரிய தொழிலதிபராகவும் விளங்குகிறார். தடபுடலாக நடந்த இவர்களின் திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழத்துகளை தெரிவிரத்தனர். இதையடுத்து இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாக சென்று வருகின்றனர்.
ஜனநாயகன் படத்தில் வரலட்சுமி
தமிழில் வரலட்சுமி முதன்முதலில் அறிமுகமானது, போடா போடி படம் மூலமாகத்தான். அதன் பிறௌ, தாரை தப்பட்டை, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்தார். இவருக்கு நாயகி கதாப்பாத்திரத்தை விட, வில்லி கதாப்பாத்திரம் நன்றாக செட் ஆனதை தொடர்ந்து, தொடர்ந்து நெகடிவ் கேரக்டர்களிலேயே நடிக்க ஆரம்பித்தார். இதனால் சண்டக்கோழி 2, நீயா 2 உள்ளிட்ட படங்களில் வில்லியாக நடித்தார். தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களில் நல்ல கதாப்பாத்திரங்களில் வந்தார்.
வரலட்சுமி, 12 வருடங்களுக்கு முன்னர் நடித்திருந்த மதகஜராஜா திரைப்படம், இந்த ஆண்டில் வெளியானது. தெலுங்கிலும், சிவாங்கி லயனஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் இவர் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். இவர் ஏற்கனவே சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வரலட்சுமியின் வருங்கால கணவருக்கு இவ்வளவு சொத்துகளா? சமூகம் பெரிய இடம் போல..!
மேலும் படிக்க | 4 மாதங்களில் வெயிட் லாஸ் செய்ய வரலட்சுமி செய்த 4 விஷயங்கள்! ரொம்ப சிம்பிள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ