குட் பேட் அக்லி-க்கு பின் அஜித் கைக்கோர்க்கும் இயக்குநர்! இதுவரை 5 படங்கள்தான் எடுத்துள்ளார்-யார் தெரியுமா?

Ajith Kumar Next Movie Director After Good Bad Ugly : அஜித்குமார் கடைசியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதையடுத்து அவர் எந்த இயக்குநருடன் கைக்காேர்க்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Mar 12, 2025, 11:37 AM IST
  • அஜித்தின் அடுத்த பட இயக்குநர்..
  • அவரை வைத்து ஏற்கனவே படம் எடுத்தவர்..
  • இதுவரை எடுத்ததே 5 படம்தான்..
குட் பேட் அக்லி-க்கு பின் அஜித் கைக்கோர்க்கும் இயக்குநர்! இதுவரை 5 படங்கள்தான் எடுத்துள்ளார்-யார் தெரியுமா?

Ajith Kumar Next Movie Director After Good Bad Ugly : தமிழ் திரையுலகின் டாப் நடிகராக வளர்ந்திருக்கும் அஜித் குமார். இவர் நடிப்பை கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. இதையடுத்து, குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடித்த அவர் எந்த இயக்குனருடன் கைகோர்த்து இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

அஜித்தின் அடுத்த படம்! 

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, அதை கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் நடிகர்கள், வெகு சில மட்டுமே. டாப் டயர் ஹீரோக்களாக எப்போதும் இருப்பது, ரஜினி, விஜய் மற்றும் அஜித்தான். ரஜினி தனது 70களிலும் தொடர்ந்து பேக் to பேக் படங்களை கொடுத்து வருகிறார். நடிகர் விஜய்யோ, அரசியல் கட்சியை தொடங்கி 2026ஆம் ஆண்டுடன் தனது திரைப்படத்திற்கு முழுக்கு போட இருக்கிறார். இதையடுத்து, அனைவரது கவனமும் அஜித்தின் பக்கம் தான் திரும்பி உள்ளது.

அஜித், பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இல்லை என்றாலும், பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நட்சத்திரமாக விளங்குகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், கடைசியாக விடாமுயற்சி ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த வெற்றியை தேடித் தரவில்லை. இதையடுத்து அவருக்கு குட் பேட் அக்லி திரைப்படம் இழந்த மார்க்கெட்டை மீட்டு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தையடுத்து அவர் எந்த இயக்குனருடன் கைகோர்க்க இருக்கிறார், என்பது குறித்த தகவல் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இவர்தான் இயக்குனரா? 

அஜித் அடுத்ததாக, தன்னை வைத்து படம் இயக்கிய ஒரு இயக்குநருடன் கைக்கோர்க்க இருப்பதாக முன்பிருந்தே தகவல்கள் வெளியானது. இதற்கிடையே தனுஷ் இவரை வைத்து இயக்குவதாக வேறு ஒரு புரளி கிளம்பியது. ஆனால், இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சிறுத்தை சிவாவும், அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. ஆனால், அந்த ப்ராஜெக்டும் கைகழுவப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. தற்போது, இன்னொரு புது தகவலும் வெளியாகி இருக்கிறது.

Ajith Kumar

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இவர், ஒரு தமிழ் திரைப்பட இயக்குநர் என்பதை தாண்டி அஜித்தின் பெரிய ரசிகர் என்ற விவரமும் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குவதாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து விட்டு, இது குறித்த இறுதி முடிவை அஜித் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

3 தாேற்றங்களில் அஜித்..

நடிகர் அஜித் குமார், குட் பேட் அக்லி படத்தில் 3 தோற்றங்களில் நடிக்கிறார். ஒருவர் நல்லவர், ஒருவர் கெட்டவர், இன்னொருவர் ரொம்ப கெட்டவர். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில் இடம் பெற்றிருந்த காட்சிகளும், பின்னணி இசையும் ரசிகர்களை பெரிதாய் கவர்ந்தது. இது, அஜித்திற்கு கம்-பேக் படமாக இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | ஜெயிலர் 2-க்கு பிறகு நெல்சன் இயக்கும் படம்! ‘இந்த’ 41 வயது நடிகர்தான் ஹீரோ..

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குநர்! ரூ.1000 கோடி வசூல் கொடுத்தவர்..யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News