)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான கூலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தோல்வியடைந்தது. நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பலர் நடித்திருந்தாலும் படம் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வியடைந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் பலரும் புலம்பி வருகின்றனர். மேலும் இணையம் முழுவதும் கூலி படம் தொடர்பாக மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது. இது படத்தின் வசூலையும் பெரிதளவில் பாதித்துள்ளது.

கமல் மற்றும் ரஜினி இணையும் புதிய படம்?
சில ஆண்டுகளுக்கு முன்னர் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. இது தொடர்பாக தகவல்களும் வெளியான நிலையில் அந்த படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் கூலி படத்தின் தோல்விக்கு பிறகு உடனடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
கமல் தயாரிப்பு?
கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரின் கீழ் இந்த படம் தயாராக இருப்பதாகவும், உடனடியாக படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கார்த்திவுடன் இணைந்து கைதி 2 படத்தை இயக்க இருந்தார். ஆனால் கூலி படத்தின் தோல்வியின் காரணமாக உடனடியாக இந்த ப்ராஜெக்ட் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பின்னால் ரெட் ஜெயண்ட் நிறுவனமும் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினி மற்றும் கமல் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.
கைதி 2 படத்தின் நிலை?
லியோ படத்தை முடித்த உடனேயே லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இயக்க இருந்தார். ஆனால் ரஜினி கூப்பிட்டதன் காரணமாக கூலி படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் அடுத்ததாக கைதி 2 படம் உருவாகும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது வெளியான இந்த தகவல் கார்த்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நீண்ட நாட்களாக மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் கைதி 2. இந்த படத்தில் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது மீண்டும் இந்த படம் தள்ளிப் போய் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணையும் படம் குறித்த கூடுதல் விவரங்கள் அடுத்தடுத்த சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ