கொரோனா தொற்றுக்கு பிறகு ஓடிடி தளங்களின் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் இருந்தது, மேலும் சில படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களுக்காகவே எடுக்கப்பட்டது. ஆனால் இவை அந்த தளங்களுக்கு பெரிய வருமானத்தை தராததால் அமேசான், நெட்பிலிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற முன்னணி ஓடிடி நிறுவனங்கள் பல முக்கிய முடிவுகளை எடுக்கத் தொடங்கியது. அதன்படி புதிய படங்களை நேரடியாக ஓடிடிகளுக்கு வாங்குவதை முதலில் நிறுத்தினார். அதன் பின்பு சிறிய படங்களை வாங்குவதையும் நிறுத்தியுள்ளனர். அப்படி சிறிய படங்களை வாங்கினால் அதற்கு பணமாக கொடுக்காமல், ரெவின்யூ ஷேரிங் முறையை கையாளுகின்றனர்.  எவ்வளவு பேர் அந்த படத்தை பார்க்கிறார்களோ அவ்வளவு பணம் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சினிமாவில் இருந்து விலகிய விஜய்..கண்கலங்கிய குட்டி ரசிகர்! வைரல் வீடியோ..


 அதேபோல அவர்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு நெட்பிலிக்ஸ் நிறுவனம் பாஸ்வேர்டை மற்றவர்களுக்கு பகிரும் முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி ஒரே அக்கவுண்டில் இரண்டு பேர் படம் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டு வந்தது. தனித்தனியாக அக்கவுண்ட் ஓபன் செய்தால் அதிக கட்டணம் வரும் என்பதால் இந்த முறைக்கு பல பயனர்கள் மாறி உள்ளனர். இந்த நடைமுறையை கொண்டு வந்தால் ஏற்கனவே உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறையும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக கடந்த ஆண்டு நெட்பிலிக்ஸில் புதிய சந்தாதாரர்கள் நிறைய பேர் இணைந்துள்ளனர். 2023ன் இறுதிக்குள் 13 மில்லியன் புதிய பயனர்களைச் சேர்த்தது நெட்பிலிக்ஸ்.


இதனை கருத்தில் கொண்டு தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இதே நடைமுறையை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. கனடிய டிஸ்னி பிளஸ் சந்தாதாரர்கள் இந்த வரவிருக்கும் மாற்றங்களை பற்றிய அறிவிப்பை கடந்த ஆண்டே பெற்றனர்.  இது நவம்பர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்தது.  உலகம் முழுவதும் இதனை அமல்படுத்த தற்போது சோதனை முயற்சியில் இறங்கி உள்ளது ஹாட்ஸ்டார்.  மேலும், அமெரிக்காவில் இந்த புதிய நடவடிக்கைகள் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாவில்லை.  மேலும் டிஸ்னிக்கு சொந்தமான Hulu, பாஸ்வேர்ட் பகிர்வு மீதான கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க சந்தாதாரர்களிடம் தற்போது கூறியுள்ளது.  வரும் மார்ச் மாதத்தில் இவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


சமீபத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும் செய்தது ஹோட்ஸ்ட்டா. காரணம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை கடந்த ஆண்டு ஜியோ நிறுவனத்திடம் ஹாட்ஸ்டார் விட்டுக் கொடுத்தது. இதன் காரணமாக அவர்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் பெரிய ஹீரோக்களின் படங்களை வாங்குவதை ஹாட்ஸ்டார் பெரிதாக விரும்புவதில்லை, இதனாலும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை ஹாட்ஸ்டார் நிறுவனம் மொபைல் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கியது, மேலும் இந்திய அணி விளையாடும் வெளிநாட்டு தொடர்களை தற்போது ஒளிபரப்பு வருகிறது. 


இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ஜியோ நிறுவனம் ஒளிபரப்பு செய்கிறது. மேலும் ஹாட்ஸ்டார் நிறுவனத்தை ஜியோ சினிமா உடன் இணைப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 50 சதவீத பங்குகளை முகேஷ் அம்பானி வாங்கியுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.  


மேலும் படிக்க | Simbu: சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் சிம்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ