வயதானவரை திருமணம் செய்தாரா பிரியங்கா? இருவருக்குமான வயது வித்தியாசம் தெரியுமா?

Age Difference Anchor Priyanka And Vasi Sachi : பிரபல டிவி தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரியங்கா, வசி சச்சி என்பவரை கரம் பிடித்துள்ளார். இவருக்கும் பிரியங்காவுக்கும் இருக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 21, 2025, 09:48 AM IST
  • பிரியங்கா-வசி வயது வித்தியாசம்!
  • ரொம்ப வயசானவரா?
  • இதோ முழு தகவல்..
வயதானவரை திருமணம் செய்தாரா பிரியங்கா? இருவருக்குமான வயது வித்தியாசம் தெரியுமா?

Age Difference Anchor Priyanka And Vasi Sachi : தமிழ் சேனல்களில் மிகவும் பிரபலமான ஸ்டார் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு, உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். இவருடைய இரண்டாவது திருமணம் குறித்த பேச்சுதான் தற்போது இணையம் முழுக்க குவிந்து கிடக்கிறது.

தமிழ்நாட்டின் ஸ்டார் தொகுப்பாளர்:

தமிழில் நிறைய டிவி நிகழ்ச்சிகள் இருக்கின்றன, அதில் அதிகமான டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் இருக்கின்றனர். அவர்களுள், அதிக சம்பளம் பெரும் தொகுப்பாளராகவும், மக்களை அதிகமாக சிரிக்க வைக்கும் தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா தேஷ்பாண்டே. முன்னர், குழந்தைகளுக்கான ஷோவை நடத்தி கொண்டிருந்தார். அதன் பிறகு, மெல்ல மெல்ல இவருக்கு, வெவ்வேறு ஷோக்களை நடத்த வாய்ப்பு கிடைத்தது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பல சீசன்களை நடத்திய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனிலும் முக்கிய போட்டியாளராக வந்து பலரை அசத்தினார். அதே போல, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனின் பட்டத்தையும் வென்றார். இப்படி ஸ்டார் தொகுப்பாளராக இருக்கும் இவர், தனது தனிப்பட்ட வாழ்விலும் சில பிரச்சனைகளை சந்தித்தார். 

விவாகரத்தில் முடித்த முதல் திருமணம்!

தொகுப்பாளர் பிரியங்கா, 2016 ஆம் ஆண்டில் பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் சில வருடங்களுக்கு உள்ளாகவே விவாகரத்தில் முடிந்தது. தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பெரிதும் வெளியில் பேசாத பிரியங்கா, இந்த விவாகரத்து பற்றி வேறு எங்கும் வெளியில் சொல்லவில்லை. தொடர்ந்து தான் தொகுத்து வந்த நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தார். இதற்கிடையில் அவரது இரண்டாம் திருமணம் குறித்த வதந்திகளும் அவ்வப்போது வெளியாகி வந்தது. 

இரண்டாவது திருமணம்:

பிரியங்கா திடீரென தனது திருமண புகைப்படங்களை instagram பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் புது வாழ்க்கையை ஆரம்பித்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். மணமேடையில் இவருடன் இருந்தவர், வெள்ளை முடியுடன் வேட்டி சட்டை கட்டிக்கொண்டு மணமகன் தோற்றத்தில் இருந்தார். இதைப் பார்த்த பலர் பிரியங்கா வயதானவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்களை பரப்பினர். உண்மையில் இவர்கள் இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசம் என்ன தெரியுமா? 

வயது வித்தியாசம்..

வயதில் அதிகமானவரை பெண்கள் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. பிரியங்காவின் கணவர், அவரை விட மிகவும் வயதில் பெரியவர் ஒன்றும் கிடையாது. அவருக்கு, தற்போது வயது 42 ஆவதாகவும், முடியை தவிர அவரது தாேற்றம் பார்க்க மிகவும் இளமையாக இருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். ஆனால், முடி மட்டும் வெள்ளையாக இருப்பதாகவும் கூறி வருகின்றனர். பிரியங்காவிற்கு வயது, 32 ஆகிறது. எனவே கிட்டத்தட்ட தன்னை விட 10 வயது பெரியவரை திருமணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம்.. வைரலாகும் வீடியோ

மேலும் படிக்க | பிரியங்காவை திருமணம் செய்தவர் இவ்ளோ பெரிய ஆளா? இவர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News