தமிழ் திரையுலகில் தற்போது முக்கிய இயக்குநராக வலம் வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் திரிஷா இல்லைனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மாபெரும் வெற்றியை இவருக்கு பெற்று தந்தது.
இந்த நிலையில், தற்போது இவர் நடிகர் அஜித் குமாருடன் கைகோர்த்து 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் நடிப்பில் உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.
ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பரிசு
நேற்று (பிப்.28) இத்திரைப்படத்தின் டீசர் வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் குமார் ரசிகர்கள் சஃப்ரைஸ் கொடுக்க உள்ளனர்.
அவருக்கு அஜித் குமார் ரசிகர்கள் 2 பவுன் தங்க மோதிரத்தை வாங்கி வைத்துள்ளார்களாம். குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸுக்கு பின், இந்த தங்க மோதிரத்தை அவருக்கு வழங்குவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்.06 ஆம் தேதி தான் 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியானது. மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இது ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை அளித்தாலும், அடுத்த வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாக இருக்கும் செய்தி அவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. பொதுவாக அஜித் படம் என்றாலே வருடத்திற்கு ஒரு படம் வெளியாவது அபூர்வமாக இருந்தது. இந்த நிலையில், ஒரே வருடத்தில் அடுத்தடுத்து படம் இறங்குவது ரசிகர்களை மகிழ்ச்சியை ஆழ்த்தி உள்ளது.
மேலும் படிங்க: 1 படத்தில் 9 படங்களின் குறியீடு! குட் பேட் அக்லி டீசரில் இதை கவனிச்சீங்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









