Ajith Good Bad Ugly Ticket Booking : கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம், குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்டை எடுத்திருக்கிறார். தற்போது தமிழகத்தில் இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் டிக்கெட் முன்பதிவு:
குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 8:02 மணிக்கு துவங்கும் என கூறப்படுகிறது. இதனால் அன்றைய தேதிக்கு அஜித் ரசிகர்கள் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
குட் பேட் அக்லி:
நடிகர் அஜித் குமார், என்னதான் தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களுள் ஒருவராக இருந்தாலும் அவர் சமீப காலங்களாக நடித்து வரும் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வசூலை பெறுவதில்லை. இப்போது வரை, அவரது ரசிகர்கள் சிலருமே கூட அஜித்தின் கெரியர் பெஸ்ட் படம் என்றால் மங்காத்தா அல்லது எண்ணை அறிந்தால் ஆகிய படங்களைதான் கூறுவர். ஆனால் அந்த படங்கள் வெளியாகியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கு பிறகு அவர் விஸ்வாசம், வலிமை, துணிவு என சில ஹிட் படங்களை கொடுத்தாலும் அதில் ரியல் அஜித்தை பார்த்த உணர்வே இல்லை என்று அவரது ரசிகர்களே உணர்ந்தனர்.
இதனிடையே, சமீபத்தில் வெளியான விடாமுயற்சி படமும் சுமாரான விமர்சனத்தை பெற்றது. போட்ட பணத்தை கூட எடுக்க முடியாத அளவிற்கு இந்த படம் நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான குட் பேட் அக்லி படத்தின் டீசரும், ப்ரமோவும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், இது அஜித்திற்கு கம் பேக் படமாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து இதுவரை வெளிவந்த டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், தற்போது வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் இந்த படம் வெளியாக உள்ளது.
Opening day records Onway #GoodBadUgly c u on April 10 pic.twitter.com/wOlzw5Tpfy
— G.V.Prakash Kumar (@gvprakash) April 1, 2025
AK being in his mass vibe is CINEMA #GoodBadUgly Second Single #GodBlessU TRENDING on YouTube
https://t.co/4gJM14J6zJ@anirudhofficial vocals in a @gvprakash musical
Lyrics by #Rokesh
Rap by #PaalDabba#GoodBadUgly Grand release on 10th April, 2025 with VERA… pic.twitter.com/48QAgwymjQ— Mythri Movie Makers (@MythriOfficial) April 1, 2025
மேலும் படிங்க: கரூரில் திரண்ட சீயான் விக்ரம் ரசிகர்கள்: வீர தீர சூரன் 2 படக் கொண்டாட்டம்
மேலும் படிங்க: ஜெய்லர் 2 எப்படி இருக்கும்.. யோகிபாபு சொல்லும் அந்த விஷயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









