அஜித்தின் 'குட் பேட் அக்லி'.. புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.   

Written by - R Balaji | Last Updated : Mar 8, 2025, 07:04 PM IST
  • அஜித்தின் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 வெளியாகிறது
  • அப்படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்
அஜித்தின் 'குட் பேட் அக்லி'.. புதிய அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

Good Bad Ugly Movie Update: நடிகர் அஜித் குமார் தனது 63வது படமான குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

Add Zee News as a Preferred Source

இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசர் தற்போது பலரையும் கவர்ந்து வருகிறது. அதேபோல் இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை இப்படம் படைத்திருக்கிறது. அதன்படி இதுவரை மட்டும் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. 

மேலும் படிங்க: வித்தியாசமான லூக்கில் துருவ் விக்ரம்.. பட்டையை கிளப்பும் பைசன்!

இப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பொதுவாக அஜித் படம் என்றால் வருடத்திற்கு ஒரு படம் வெளியாவதே அபூர்வமாக இருக்கும். இச்சூழலில் இந்த ஆண்டே தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை வெளியிட திட்டமிட்டு அறிவித்திருப்பது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் தான் இவரது நடிப்பில் விடாமுயற்சி படம் திரையரங்குகளில் வெளியானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் குட் பேட் அக்லி மீது கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. 

Good Bad Ugly Movie First Single: இந்த நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி "படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் விரைவில். சுட சுட ரெடி பண்ணியிருக்கோம்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிங்க: சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வெளியான முக்கிய அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News