Good Bad Ugly First Choice For Priya Varrier Character : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித்குமார் நடித்திருந்த படம் குட் பேட் அக்லி. இந்த படம், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதற்கு காரணம், இந்த படத்தில் இருந்த எக்கச்சக்க படங்களின் ரெஃபரன்ஸ்தான் என கூறப்படுகிறது. அப்படி ஒரு ரெஃபரன்ஸாக இருந்த பாடல், ‘தொட்டு தாெட்டு பேசும் சுல்தானா’. இந்த பாடலில் நடனமாடிய பிரியா பிரகாஷ் வாரியர், இப்போது படு ஃபேமஸ் ஆகிவிட்டார். இதில், அவருக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?
குட் பேட் அக்லி:
தமிழ் இயக்குநர் என்பதை தாண்டி, அஜித் குமாரின் பெரிய ரசிகராக இருப்பவர், ஆதிக் ரவிச்சந்திரன். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், மார்க் ஆண்டனி படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இதையடுத்து, இவர் அஜித்தை வைத்து இயக்கிய படம்தான், குட் பேட் அக்லி. இந்த படத்தில், அஜித்திற்காக செம சம்பவம் செய்ய வேண்டும் என நினைத்த அவர் அதனை செய்தும் முடித்து விட்டார். இதனை, சில சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், ஜென்ரல் ஆடியன்ஸையும், குடும்ப ரசிகர்களையும் இப்படம் கவர்ந்துள்ளது.
தாெட்டு தொட்டு பேசும் சுல்தானா..
குட் பேட் அக்லி படத்தில், அஜித்தின் முன்னாள் பட ரெஃபரன்ஸ்கள் மட்டுமல்ல, பிற ஹீரோக்களின் பட ரெஃபரன்ஸும் அடங்கியிருந்தது. அந்த படங்கள் பெரும்பாலும் 90ஸ்களில் எடுக்கப்பட்ட படங்களாக இருந்தது. அப்படி, இப்படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல்தான், ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’. இதன் ஒரிஜினல் பாடலில் நடிகை சிம்ரனும், நடன இயக்குநர் ராஜு சுந்தரமும் நடனமாடியிருப்பர். இதனை, குட் பேட் அக்லி படத்தில் ரீ-கிரியேட் செய்ய நினைத்த ஆதிக் மலையாள நடிகை பிரியா வாரியரையும்-அர்ஜுன் தாஸையும் நடனமாட வைத்திருப்பார்.
பிரியா வாரியர் இந்த படத்தில் அர்ஜுன் தாஸின் காதலியாக நடித்திருப்பார். இவருக்கு பதில் இந்த படத்தில் நடிக்க இருந்த இன்னொரு நாயகி யார் தெரியுமா?

அந்த நடிகை யார்?
பிரியா வாரியரின் இந்த கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர், 23 வயதான நடிகை ஸ்ரீலீலா ஆவார். தென்னிந்தியாவின் பிரபல இளம் நடிகையாக விளங்கும் இவர், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் மகேஷ் பாபு, நந்தமுரி பாலகிருஷ்ணா உள்ளிட்டோருடன் சேர்ந்து ஹிட் படங்களில் நடித்து விட்டார். தமிழில், இப்போது பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
இவரால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவில்லையாம். இதையடுத்துதான், இந்த வாய்ப்பு பிரியா வாரியருக்கு சென்றதாக கூறப்படுகிறது.
பிரியா வாரியர், இப்போது தமிழ் திரையுலகில் மேலும் சில படங்களில் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின், வெற்றி விழாவில் பேசிய அவர், மேடையிலேயே ஆதிக் ரவிச்சந்திரனிடம் அடுத்த படத்திலும் வாய்ப்பு கேட்டதும் வைரலானது. இதையடுத்து, அவரை தொடர்ந்து வேறு ஏதேனும் படத்தில் பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | 50 வயது அப்பாஸுக்கு ஜோடியாகும் 27 வயது நடிகை! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









