Good Bad Ugly Box Office Collection Day 1: குட் பேட் அக்லி திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருப்பதால் வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் எகிறும் என்று ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

Good Bad Ugly Box Office Collection Day 1: இப்படி ஒரு அஜித் படம் பார்த்து எத்தனை நாள் ஆச்சு என்று ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம். "இவன் பெயர் முழுங்கட்டும், மனுஷன் என்னம்மா ஆக்ட் பண்ணி இருக்காரு" என்று திரையில் வரும் தங்கள் ஆசை நாயகனை தரையில் கால்படாமல் அமர்க்கணமாக கொண்டாடி தீர்க்க படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? ரசிகர்கள் கூறுவது என்ன? பார்ப்போம்.
"ரெடியா மாமே" குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை அஜித்தின் (Ajith Kumar) டிரான்ஸ்பார்மேஷன் ஒவ்வொன்றும் அட்டகாசமாக இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
ரொம்ப ரொம்ப நன்றி, எங்க தலையை செதுக்கிட்டாப்பள.. இது 20 வருஷத்துக்கு முன்னாடி பாத்த தலை. பயங்கரமான படம். 10 வருஷம் நின்னு பேசும் சார் என ரசிகர்கள் கூறியுள்ளனர். இதுதான் படத்துல மாஸ் சீன் இருக்கா என்று கேட்டால் படமே மாஸாக இருப்பதாக உற்சாக பூச்சல் போடுகிறார்கள் அவரது ரசிகர்கள்.
முதல் முறையாக விஜய் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது குட் பேட் அக்லி. அதற்கு காரணம் படத்தில் இரண்டு இடங்களில் விஜய் படங்களின் ரெபரன்ஸ் காட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் தனது ஒவ்வொரு படத்திலும் இடைவேளையின் போது 'ஐ அம் வெயிட்டிங்' என்று டயலாக் சொல்வதை துப்பாக்கி படத்திலிருந்து வழக்கமாக்கி உள்ளார். குட் பேட் அக்லி படத்தின் இடைவேளையில் 'நண்பா ஐ அம் வெயிட்டிங்' என்று அஜித் சிரித்து கொண்டே தலையாட்டுவது விஜயை தொடர்ந்து நடிக்க அழைப்பது போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
கமல்ஹாசனின் 'சகல கலா வல்லவன்' படத்தில் இடம்பெற்ற முக்கியமான பாடல் ஒன்று படத்தின் சண்டை காட்சியில் பட்டையை கிளப்புவதாகவும், 'ஒத்தருவா' பாடல், 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடல், 'ஆலுமா டோலுமா' பாடல் கலவை என்று பின்னணி இசையில் ஜிவி பிரகாஷ் குமார் திரையரங்கை உண்மையிலேயே சிதரவிட்டுள்ளதாக ரசிகர்கள் கூறினார்.
திரிஷாவின் (Trisha) 'கில்லி டச்', அஜித்தின் பழைய ஹிட் படங்களில் இடம்பெற்ற டயலாக்களின் டிஃபரண்ட் மாடுலேஷன் என்று கலகலப்பான ஆக்ஷன் அஜித்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திரையில் கொண்டு வந்ததே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
பண்டிகை அல்லாத நாளில் வெளியான 'குட் பேட் அக்லி' படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 35 கோடி ரூபாயையும், உலகம் முழுவதும் 50 கோடி ரூபாயையும் தாண்டி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.
பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருப்பதால் வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் எகிறும் என்று ரசிகர்கள் எதிர் பார்க்கிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ