Ajith Kumar Good Bad Ugly: தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் அஜித்குமார். இவர், சமீபத்தில் நடித்து முடித்த படம் குட் பேட் அக்லி. இந்த படம், இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
குட் பேட் அக்லி:
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநராக இருப்பவர், ஆதிக் ரவிச்சந்திரன். இவர், ஒரு இயக்குநர் என்பதை தாண்டி, நடிகர் அஜித்தின் பெரிய ரசிகர் ஆவார். விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கும் போதே, குட் பேட் அக்லி படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்து விட்டது.
கிளாசிக் அஜித்தை திரையில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று பலர் புலம்பி வந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் வெளியானது. “ஒத்த ரூபாயும் தாரேன்” பாடலை ரீ-மிக்ஸ் செய்து இதில் உபயாேகித்திருந்தனர். இதில், அஜித் கேங்க்ஸ்டர் அவதாரம் எடுத்திருக்கிறார். டிரைலர் கட் பயங்கரமாக இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
குட் பேட் அக்லி ரிலீஸ்:
கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் குட் பேட் அக்லி. குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம் இது. குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தில் இன்றைய ட்ரெண்ட்க்கு ஏற்றபடி சில காட்சிகளையும் வைத்துள்ளது ரசிகர்களுக்கு வியப்பை தந்துள்ளது. முதல் நாள் முதல் காட்சி 9 மணிக்கு துவங்கியது. குட் பேட் அக்லி படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் அஜித் ரசிகர்கள் ஆடிப் பாடி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
குட் பேட் அக்லி நடித்த நடிகர் நடிகைகள்:
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குட் பேட் அக்லி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரூ.500 கோடி வசூலை தாண்டும்:
இந்நிலையில் தானியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, தமிழ்நாடு முழுக்க குட் பேட் அக்லிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அஜித்தின் இந்த படம், மிகப்பெரிய பெஞ்ச் மார்க்காக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அஜித் ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோ. இப்படிப்பட்ட சூழலில், குட் பேட் அக்லி படம் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் ஆக இறுக்கம் என தெரிகிறது. சில ரசிகர்கள் மட்டும்தான் தங்கள் வெறித்தனமான அன்பை காட்டுவார்கள். அதுபோல அஜித்தின் ரசிகர்களும் வெறித்தனமானவர்கள்.
குட் பேட் அக்லி படம் ஓடும் தியேட்டர்களின் வாசலிலேயே கடவுளே அஜித்தே என்றுதான் கோஷம் போடுகிறார்கள். இந்த படத்தில் எல்லாமே உள்ளதால், இது ஒரு மாஸ் மசாலா படமாக இருக்கும். மேலும் படம் வெளியீட்டிற்கு முன்பே இதன் புக்கிங் 15 கோடிக்கு மேல் இருந்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் 20 கோடிக்கு நடந்துள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை என மொத்தம் 4 நாளில் 120 கோடியை தாண்டும். எப்படியும், 500 கோடி முதல் 750 கோடி வரை இந்த படத்தின் கலெக்ஷனை எதிர்பார்க்கிறார்கள் என்றார்.
மேலும் படிக்க | வடிவேலு ரிஜெக்ட் செய்த படம்! விஜய் ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் ஆனது..எது தெரியுமா?
மேலும் படிக்க | அட்லீ X அல்லு அர்ஜுன் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? ‘இந்த’ 37 வயது நடிகைதான்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









