இன்னும் ரிலீஸே ஆகல..அதுக்குள்ள இவ்ளோ வசூலா? குட் பேட் அக்லி ப்ரீ-புக்கிங் கலக்ஷன்..

Good Bad Ugly Movie Pre Booking Collection : அஜித் குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படம், ரிலீஸிற்கு முன்னரே வசூலை வாரிக்குவித்து வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Apr 8, 2025, 12:02 PM IST
  • குட் பேட் அக்லி ப்ரீ புக்கிங் வசூல்
  • அதுக்குள்ள இத்தன கோடியா?
  • எவ்ளோ தெரியுமா?
இன்னும் ரிலீஸே ஆகல..அதுக்குள்ள இவ்ளோ வசூலா? குட் பேட் அக்லி ப்ரீ-புக்கிங் கலக்ஷன்..

Good Bad Ugly Movie Pre Booking Collection : தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் அஜித்குமார். இவர், சமீபத்தில் நடித்து முடித்த படம் விடாமுயற்சி. இந்த படம், வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் ப்ரீ-புக்கிங் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

குட் பேட் அக்லி:

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநராக இருப்பவர், ஆதிக் ரவிச்சந்திரன். இவர், ஒரு இயக்குநர் என்பதை தாண்டி, நடிகர் அஜித்தின் பெரிய ரசிகர். விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் இருக்கும் போதே, குட் பேட் அக்லி படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்து விட்டது.

கிளாசிக் அஜித்தை திரையில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று பலர் புலம்பி வந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் வெளியானது. “ஒத்த  ரூபாயும் தாரேன்” பாடலை ரீ-மிக்ஸ் செய்து இதில் உபயாேகித்திருந்தனர். இதில், அஜித் கேங்க்ஸ்டர் அவதாரம் எடுத்திருக்கிறார். டிரைலர் கட் பயங்கரமாக இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ப்ரீ புக்கிங்:

குட் பேட் அக்லி படத்தின் ட்ரைலர் வெளியானதற்கு 2 மணி நேரம் கழித்து அதன் ப்ரீ-புக்கிங்கும் தொடங்கியது. படம் ரிலீஸாக இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில், முன்பதிவில் இப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.

குட் பேட் அக்லி படம், இப்போது வரை, ப்ரீ-புக்கிங்கில் மட்டும் சுமார் ரூ.18 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. பெரிய ஹீரோக்களின் படங்கள், வெளியாவதற்கு முன்னரே வசூலிப்பது வழக்கம் என்றாலும், அஜித் தோல்வி படத்தை கொடுத்த பிறகும் அவரது அடுத்த படத்தை ஆவலுடன் பார்க்க ரசிகர்கள் இப்படி எதிர்பார்த்து காத்திருப்பது என்பது ஆச்சரியத்துக்குரியதாக பார்க்கப்படுகிறது.

சென்சார் சான்றிதழ்:

எந்த படம் வெளியாகும் முன்பும், தணிக்கை குழு, படத்தை பார்த்துவிட்டு எந்த காட்சிகள் இருக்கலாம், எதெல்லாம் இருக்க கூடாது என்று சான்றிதழ் அளிக்க வேண்டியது அவசியம். அப்படி, குட் பேட் அக்லி படத்துக்கும் U/A சர்டிஃபிகேட் வழங்கப்பட்டுள்ளது. 

குட் பேட் அக்லி, திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த நிறுவனமானது X தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்திருக்கும் சான்றிதழ் குறிப்பிட்டிருக்கிறது.

வின்டேஜ் லுக்கில் அஜித்..

நடிகர் அஜித்குமார், குட் பேட் அக்லி படத்தில் மொத்தம் 3 தாேற்றங்களில் வருகிறார். அதில் ஒன்று, அமர்க்களம் லுக். அந்த படத்தில் எப்படி வெளியில் ஒரு சட்டை, உள்ளே ஒரு டீ-ஷர்ட், கழுத்தில் செயின் போட்டுக்கொண்டு வருவாரோ, அதே போல இதிலும் வருகிறார். சிகை அலங்காரம் கூட அப்படியே இருக்கிறது. இது, அவரது இளமை கால பகுதிக்கான கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

நடிப்பவர்கள்..

குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். இது இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் 6வது படமாகும். சிம்ரன் கேமியோ கதாப்பாத்திரத்தில் வருகிறார். ஜாக்கி ஷ்ராப், யோகி பாபு, பிரபு, சுனில் என பலர் நடிக்கின்றனர். இதில் அஜித்தின் பெயரே AKதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | குட் பேட் அக்லி: அஜித்தின் சட்டை விலை எவ்வளவு தெரியுமா? கேட்டால் வாய பொளப்பீங்க..

மேலும் படிக்க | அஜித்துக்கு தொடர் தோல்விகளை கொடுத்த ஏப்ரல் மாதம்! வரலாற்றை மாற்றுமா குட் பேட் அக்லி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News