)
Ajith Kumar Good Bad Ugly Teaser Decoding : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஒன்றரை நிமிடம் கொண்ட இந்த டீசரில் பல விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அவை குறித்து இங்கு பார்ப்போம்.
குட் பேட் அக்லி டீஸர்:
கோலிவுட்டின் வளர்ந்து வரும் இயக்குனராக இருப்பவர், ஆதிக் ரவிச்சந்திரன். மார்க் ஆண்டனி படம் மூலம் 100 கோடி ஹிட் கொடுத்த இவர், அடுத்து குறி வைத்த நடிகர் அஜித் குமார். ஆதிக், இயக்குனர் என்பதை தாண்டி வெரித்தனமான அஜித்தின் ரசிகரும் கூட. விடாமுயற்சி படத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் போதே தன் படத்தில் அவரை நடிக்க வைக்க சம்மதம் பெற்றார். அதன் பிறகு அஜித் இரவு பகல் பாராமல் சில நாட்களுக்குள்ளேயே தன் பங்கு படப்பிடிப்பை முடித்து விட்டார்.
குட் பேட் அக்லி படத்தின் டீசர், வெளியாகி இருக்கிறது. இதில் அஜித் பலவித தோற்றங்களில் வருவதோடு, பார்ப்பதற்கு பயங்கரமாகவும் இருக்கிறார். இதில் கவனிக்க தக்க சில விஷயங்களை இருக்கின்றன.
டேவிட் பில்லா:
அஜித் நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் பில்லா. 2007 இல் வெளியான இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். இதில் வரும் அஜித்தின் கதாபாத்திரமான டேவிட் பில்லா இறந்து விடுவது போல காண்பித்து இருப்பர். ஆனால் குட் பேட் அக்லி படத்தில், இந்த கேரக்டர் வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. டீசரிலேயே அது காண்பிக்கப்பட்டிருக்கிறது. இதனை பெரிய திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
விண்டேஜ் அஜித்:
நடிகர் அஜித்குமார், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே கடந்த சில வருடங்களாக நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வலிமை படத்தில் கருப்பு முடியுடன் வந்தார். அதன் பிறகு இப்போது வெளியான விடாமுயற்சி படத்திலும் சில காட்சிகளில் அப்படி தோன்றியிருந்தார். ஆனால் இதையெல்லாம் தாண்டி குட் பேட் அக்லி படத்தில் அவரை கொஞ்சம் ஒல்லியாக்கி, முடியை கருப்பாக்கி இளைஞராக விண்டேஜ் கதா பாத்திரத்தில் அவரை காண்பித்து இருக்கின்றனர். இதனால் துறுதுறுவென முன்னர் இருந்த அஜித்தை இந்த படத்திலும் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனை படங்களின் ரெஃபரன்ஸா?
1 படத்தில் 9 படங்களின் குறியீடுகள்:
அஜித்தின் பல படங்களின் ரெஃபரன்ஸ்களும் இதில் வைக்கப்பட்டுள்ளன. அவரது சூப்பர் ஹிட் படங்களான அமர்க்களம், தீனா, வாலி உள்ளிட்ட படங்களும் ரெட், பில்லா, வேதாளம், அசல், அட்டகாசம், மங்காத்தா உள்ளிட்ட 9 படங்களின் கெட்-அப்களும் இடம் பெற்றுள்ளன. இதனால் படம் கண்டிப்பாக பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி படத்தின் இசை..
ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் தற்போது உருவாகி வரும் நிலையில், இதில் இடம் பெற்றுள்ள டிஸ்கோ பாடல் முதன்முதலாக வெளியானது. இந்த இசையும் குட் பேட் அக்லி டீசரில இடம் பெற்றுள்ள இசையும் ஒரே மாதிரி இருப்பதாக சில ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
படத்தின் ரிலீஸ்:
குட் பேட் அக்லி திரைப்படம், வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என டீசரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ