குட் பேட் அக்லி vs கூலி! போட்டி போட்டு ஒரே நாளில் அப்டேட் பெரிய படங்கள்..

Good Bad Ugly Vs Coolie : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட்டும், ரஜினியின் கூலி திரைப்படத்தின் அப்டேட்டும் இன்று ஒரே நாளில் வெளியாகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 4, 2025, 01:30 PM IST
  • குட் பேட் அக்லி vs கூலி
  • ஒரே நாளில் அடுத்தடுத்த அப்டேட்..
  • அப்படி என்ன பெரிய அப்டேட்?
குட் பேட் அக்லி vs கூலி! போட்டி போட்டு ஒரே நாளில் அப்டேட் பெரிய படங்கள்..

Good Bad Ugly Vs Coolie : 2025ல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் பல இருக்கின்றன. அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் கூலி திரைப்படம் அடங்கும். இந்த இரு படங்களின் அப்டேட்டும் தற்போது ஒரே நாளில் வெளியாகியிருக்கிறது. இது குறித்த முழுவிவரத்தை இங்கு பார்ப்போம். 

Add Zee News as a Preferred Source

குட் பேட் அக்லி திரைப்படம்: 

விடாமுயற்சி தோல்விக்கு பிறகு, அஜித் குமார் அடுத்ததாக திரையில் தோன்றியிருக்கும் படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித் பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்த படத்தில் வித்தியாசமான தாேற்றத்தில் வர இருக்கிறார்.

ஆதிக், தமிழ் திரைப்பட இயக்குநர் என்பதை தாண்டி அஜித்தின் பெரிய ரசிகர். அவர் இயக்கும் பல திரைப்படங்களில், அஜித்தின் ரெஃபரன்ஸும் இருக்கும் இந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக இருக்கிறது.

கூலி திரைப்படம்:

74 வயதிலும், இன்னும் இளைஞர்களிடம் இருக்கும் அதே துள்ளளுடனும், துடிப்புடனும் இருக்கும் ஹீரோ, ரஜினிகாந்த். இவர் ‘தேவா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம், கூலி. இந்த படம் மூலமாக லோகேஷ் கனகராஜ்ஜும் இவரும் முதல் முறையாக கூட்டணி சேர்கின்றனர். இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். மேலும், உப்பேந்திரா, நாகார்ஜுனா, செளபின் சாஹிர் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று, வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

போட்டி போட்டு அப்டேட்!

குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட்டும், கூலி திரைப்படத்தின் அப்டேட்டும் ஒரே நாளில் வெளியாக இருப்பதை பற்றி, ரசிகர்கள் இணையதளங்களில் பேசி வருகின்றனர். இரு படங்களும் ஒரே நாளில் ஏன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் சிலர் கேள்வியெழுப்பி உள்ளனர்.

அப்படி என்ன அப்டேட்?

குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் போஸ்டரில், நடிகர் அஜித் ‘அமர்க்களம்’ படத்தின் லுக்கில் இருக்கிறார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Pictures (@sunpictures)

கூலி படத்தை பொறுத்தவரை, இதன் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரிலீஸ் தேதி, வரும் சுதந்திர தினம், அதாவது ஆகஸ்ட் 25ஆம் தேதியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக, காத்துக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | அஜித்துடன் மோதும் ரஜினி! கூலி படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?

மேலும் படிக்க | விடாமுயற்சி-குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படம் எது? இயக்குநர் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News