வலிமை படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிக்கொண்டு இருக்கிறது.  இப்படத்தை பற்றி நாள்தோறும் பலரும் பெருமை பேசி வருகின்றனர்.  இந்த படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று வெளியாகி இருக்கிறது.  இதுகுறித்து 'வலிமை' பட வெளியீட்டுக்கு முன்னர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றன் சங்கரலிங்கம் அவரது கருத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 'வலிமை' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?


அதில் அவர் கூறுகையில், 'காலை நேரத்தில் என் நண்பர்களோடு நடைபயணம் மேற்கொண்டேன்.  அப்போது என்னுடைய நண்பர்களில் ஒருவர் திரையரங்கில் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார்.  உடனே நான், எதுவும் டிக்கெட் முன்பதிவு செய்து தர வேண்டுமா என்று கேட்டேன், ஆமாம் அண்ணா, நாளை அஜித்தின் 'வலிமை' திரைப்படம் வெளிவருகிறதல்லவா என்று உற்சாகத்துடன் சொன்னார். 


'வலிமை' திரைப்படம்  புரட்சித்தலைவியின் பிறந்தநாளான 24ம் தேதி வெளியிடப்படுவது குறித்து இரண்டொரு நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தேன். 'வலிமை' திரைப்படத்தின் தாய் பாசம் பற்றிய பாடல் அம்மா அவர்களின் நினைவு தினத்தில் வெளியிடப்பட்டது.  திரைப்படம் அம்மா பிறந்த நாளில் வெளிவர இருக்கின்றது.  இது குறித்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த நண்பர் கேட்டார்.  புரட்சித்தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.  அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க விரும்புகிறாரா, அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் இருக்கிறது.



 


படத்தில் வரும் காட்சிகளையும், வசனங்களையும் பார்த்துதான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தேன். மாயக் கண்ணன் பிறந்த அஷ்டமியான நாளை படம் வெளிவருவது ஆச்சரியம் தானே, அஜித் அவர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறாரா, இல்லை நடிகை ஶ்ரீதேவியின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வெளியிடப்படுகிறதா என்பதற்கு படம் வெளிவந்த பிறகே விடை கிடைக்கும். காரணங்கள் எதுவாக இருந்தாலும் எங்களின் திருநாளான தாயின் பிறந்தநாளில் வெளிவரும் சகோதரர் அஜித்தின் 'வலிமை' திரைப்படம் மகத்தான வெற்றி பெற என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டு இருந்தார். ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்த அஜித் விரைவில் அரசியலும் வருவார் என்கிற இவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR