சமீப காலங்களில் மிக அதிக அளவிலான ஏதிர்பார்ப்புகளை எற்படுத்தியுள்ள படங்களில் வலிமை படமும் ஒன்றாகும். தல அஜித் நடித்து எச் வினோத் இயக்கிய வலிமை படத்தின் திரையரங்க உரிமை மிக அதிகமான தொகையில், ரெகார்ட் விலையில் விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் (Boney Kapoor) இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அவர் தனது செய்தியில், “எங்கள் படமான #வலிமை படத்தின் தமிழக திரையரங்க உரிமைகள் ரோமியோ படங்களின் ராகுலுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் @mynameisraahul மற்றும் @Gopuram_Cinemas" என்று குறிப்பிட்டுள்ளார்.



ALSO READ: இர்பான் கானின் இறுதி விருதாக Filmfare Awards 2021 சிறந்த நடிகர் விருது, வெற்றியாளர்களின் பட்டியல்


கோபுரம் சினிமாஸின் அன்புசெழியன் கோலிவுட்டின் மிகப்பெரிய நிதியாளர் ஆவார். ராகுல் சில காலமாக திரைப்பட தயாரிப்பு துறையில் இருந்து வருகிறார். வலிமை (Valimai) படத்திற்கான திரையரங்க உரிமைகள் மிக அதிக தொகைக்கு பெறப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரையிலான அஜித் (Ajith) படங்களில் இந்த அளவு தொகைக்கு எந்த படமும் வாங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 


வலிமை ஒரு அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இன்னும் ஸ்பெயினில் எடுக்கப்பட வேண்டிய ஒரு சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு மட்டும் நடக்க வெண்டியுள்ளது என்று கூறப்படுகிறது. அதுவும் மிக விரைவிலேயே எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தை ஒட்டி திரையரங்குகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


ALSO READ: 99 Songs பாடல் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானால் பரபரப்பு: வைரல் ஆன வீடியோ